Ad Widget

அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

-shooting-leaves-3-muslim-students-dead

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் 3 பேரையும் சுட்டுக் கொன்றார்.

அதன் பின்னர், வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே,ஸ்டீபன் ஹிக்ஸ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டீபன் கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டு துர்ஹம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது முழுக்க முழுக்க மதத்தின் மீதான வெறுப்பினால் நடைபெற்ற கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts