வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து

வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

us_snow_storm

அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க்கின் மேயர் கூறியுள்ளார்.

கனெக்டிகட் மாநில நிர்வாகமோ அங்கு போக்குவரத்துத்துகளை தடை செய்ய உத்தேசித்துள்ளது.

Related Posts