- Tuesday
- May 13th, 2025

இஸ்லாமிய அரசு இயக்கத்தின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக போக்கோ ஹராம் அறிவித்திருப்பது, அந்த இயக்கத்தினர் நெருக்கடியை சந்தித்துவருவதையே காட்டுகின்றது என்று நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது. நைஜீரிய மற்றும் பிராந்திய இராணுவப் படைகளின் தாக்குதல்களின் விளைவாக, போக்கோ ஹராம் ஆயுததாரிகள் தமது வல்லமைகளை இழந்து, கடுமையான சேதங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். போக்கோ ஹராமின்...

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். அந்த விமானம் தொடர்பான எந்தத் தகவலையும் மலேசிய அதிகாரிகள் மறைக்கவில்லையென்றும் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். 239 பேருடன் காணாமல் போன அந்த விமானத்தைத் தேடும் பணியை...

லண்டனில் "யாழ் வுட்" என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். "யாழ் வுட்"...

நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நஜாபா என்ற அந்தக் கிராமத்திற்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள், வீடுகளைப் பார்த்துச் சுட்டனர். பிறகு கிராமத்திற்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்தனர்....

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.போப்ஸ் இதழ் வருடாந்தம் வெளியிடும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலிலேயே இவர் முதலிடத்தில் உள்ளார். உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலை போப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பேஸ்புக்ஸ் நிறுவுனர் மாக் ஜூக்கர்பேக் முதல் 20 இடத்துக்குள் வந்துள்ளார். அத்துடன், கூடைப்பந்தாட்ட நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கல்...

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும்...

கடவூச்சீட்டுக்களோ அல்லது சட்ட ரீதியான ஆவணங்களோ எதுவுமின்றி இந்தோனேஷியாவினுள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சுமார் 85 இலங்கையர்கள் வட சுமத்திராவின் பெலவான், மேதன் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம். இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப்...

இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பிடம் பிடிபட்ட மேற்குலக பணயக்கைதிகளை சிரமறுத்துக்கொல்லும் காணொளிகளில் அவற்றை செய்தவராக அடையாளப்படுத்தப்பட்ட “ஜிகாதி ஜான்” யார் என்கிற அடையாளம் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த இவரது பெயர் மொஹம்மத் எம்வாசி என்று தெரியவந்திருக்கிறது. மேற்கு லண்டனைச் சேர்ந்த இவர் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிலகாலமாகவே தெரிந்திருந்தது. இவரது அடையாளம் மற்றும் பெயர்...

வடக்கு இராக்கின் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் புராதன பொருட்களை ஆயுததாரிகள் அழிப்பதைக் காட்டுகின்ற வீடியோ காட்சியை இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், பெரிய சிலைகளையும் இடித்து வீழ்த்துகின்ற ஐஎஸ் ஆயுததாரிகள், சுத்தியலால் அவற்றை அடித்து உடைக்கின்றனர். கிறிஸ்துவுக்கு முன் 9-ம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட...

ஆஸ்திரேலியாவின் சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார். சிட்னியில் கடந்த டிசம்பரில் ஆயுததாரி ஒருவர் பணயம் வைத்திருந்த இருவரை கொன்ற சம்பவத்தின் பின்னணியிலேயே பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது. இரானிலிருந்து வந்து குடியேறியிருந்த- குறித்த இஸ்லாமியவாத ஆயுததாரி ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த...

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [caption id="attachment_40563" align="aligncenter" width="625"] கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர் [/caption] கொல்லப்பட்ட...

இராக்கின் மேற்கு நகரான அல்-பாக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக இராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த...

மிகவும் நுட்பமான கணினித் தாக்குதல் ஒன்றில், 30 நாடுகளில் சுமார் 100 வங்கிகளில் இருந்து பல நூறு மிலியன் டாலர்கள் பணம் திருடப்பட்டிருக்கிறது என்று ரஷ்ய கணினிப் பாதுகாப்பு நிறுவனமான “கேஸ்பர்ஸ்கி லேப்” கூறுகிறது. அவர்கள் கையாண்ட முறை என்ன ? யுக்ரெயின் தலைநகர் கீவ் பகுதியில், தானியங்கிப் பணம் தரும் இயந்திரம் ஒன்று, தாறுமாறான...

அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல்...

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று ஆண்டு காலம் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரியுள்ளார். இத்திட்டத்தில் அமெரிக்கப் படைகள் மட்டுப்படுத்தபப்ட்ட வகையில் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது இராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்படுத்திவரும் ஐ எஸ் அமைப்பு மீது தாக்குதல்களை...

சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிசெய்திருக்கிறார். அவர் கடந்த 18 மாதங்களாக அந்தத் தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அந்த இருபத்தி ஆறு வயதான தொண்டு நிறுவன ஊழியரது கொலைக்கு காரணமானவர்களை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும்...

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள். மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி...

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் இந்த தீவிரவாத குழு ஈவு, இரக்கமற்ற அட்டூழிய செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஜோர்டான்...

ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டே முக்கால் வயதுக் குழந்தை ஒன்றுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு சிறிய குழந்தைக்குச் செய்யப்பட்ட முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_39854" align="aligncenter" width="625"] ரஷ்யக் குழந்தையும் சிகிச்சையளித்த மருத்துவர்களும் [/caption] ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திற்கு அருகில் இருக்கும்...

All posts loaded
No more posts