- Thursday
- August 13th, 2026
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார...
சுழிபுரத்திலுள்ள தனது கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்ட குழுவில் தனது மகனும் இடம்பெற்றிருந்தை அறிந்த தந்தை ஒருவர், தனது மகனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து, அவனைத் திருத்தி தருமாறும் பொலிஸாரைக் கேட்டுக்கொண்ட சம்பவமொன்று, பொன்னாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, சிறுவனான மகனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த திருட்டுக்...
கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில்...
வடக்கு மாகாண முதலமைச்சர், எனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உறுப்பினர் பரஞ்சோதியின் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் உடனடியாகவே மறுத்திருந்தார். வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து...
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டுவருகின்றது. மேற்படி கட்டுமான வேலைகளில் பெருமளவு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவசர அவசரமாக மதில் கட்டி எழுப்பும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவ மற்றும் அரச...
யாழ். பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட விஞ்ஞானப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும்...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேயே அமைக்கவேண்டுமென்பதை வலியுறுத்தி இன்று முதல் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவலை பாராளுமன்றத்தில் நேற்று நிதி முகாமைத்துவம் (பொறுப்பு திருத்தச்) சட்டமுலத்தின் இராண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...
முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீரென மரணமடையும் சம்பவங்கள் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தகவல்களை சேகரிக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபையின் 58ஆம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம், முன்னாள் போராளிகள் சிலர், தங்கள்...
இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே அவர் இவ்வாறு...
என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கு, மாகாண சபை ஆளுங்கட்சியில் உள்ள ஜிஞ்சர் குறூப்பை சேர்ந்தவர்களே முயற்சிப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கான குழு ஒன்றை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளமை தொடர்பாகவும் அந்தக் குழுவின் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாகாண சபைக்கு...
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 'ஐக்கிய நாடுகள் சபையின்...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சென் ஜேம்ஸ் வித்தியாலயம் (வகை-2), நாவாந்துறை றோ. க. வித்தியாலயம் (வகை-2), கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் (வகை-2), கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம் (வகை-2), கொழும்புத்...
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார். மேற்குறித்த வழக்கு நேற்றய தினம் செவ்வாய்க்கிழமை(9) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த மாணவியின் கொலை தொடர்பிலான விசாரணை குறித்து...
எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் மற்றும் எக்ஸ்டா மைல் டிசல் ஆகிய எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் தற்போது 121 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன் விலை 2 ரூபாயால் குறைவடைகின்றது. 97 ரூபாய்க்கு விற்கப்படும் எக்ஸ்டா மயில் டிசல்,...
பெண் பொலிஸ் உப பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் 2016.07.29ஆம் திகதி வெளியிடப்பட்ட 1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகைமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.08.29 ஆகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நாளை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, தயா மாஸ்டருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்....
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 129 பேர் காயமடைந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில்...
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...
தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற முன்னாள் போராளிகளின் மர்ம சாவு, வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரையில் 105 முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது. புனர்வாழ்வளிப்பு காலத்தில்அவர்களுக்கு ஏதேனும் விஷ ஊசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அண்மையில் ஒட்டுச்சுட்டானில்...
Loading posts...
All posts loaded
No more posts
