Ad Widget

வடக்கு மாகாணசபையில் ஜிஞ்சர் குறூப்!-பொ.ஐங்கரநேசன்

என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கு, மாகாண சபை ஆளுங்கட்சியில் உள்ள ஜிஞ்சர் குறூப்பை சேர்ந்தவர்களே முயற்சிப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கான குழு ஒன்றை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளமை தொடர்பாகவும் அந்தக் குழுவின் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாகாண சபைக்கு தெரியப்படுத்தும் பிரேரணை ஒன்றை முதலமைச்சர் சபையில் முன்வைத்தார்.

இந்த பிரேரணை மீதான விவாதத்தின்போது தம்மை ஜிஞ்சர் குறூப் என பகிரங்கமாக அடையாளப்படுத்திய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் நியமித்த விசாரணை குழுவை ஆட்சேபித்ததுடன் இந்த குழு அமைச்சு பொறுப்புக்களை வகிக்கும் மாகாணசபை உறுப்பினர்களை விசாரிப்பது சிறப்புரிமை மீறல் எனவும் மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட தெரிவு குழுவை அமைக்குமாறும் கேட்டதுடன் இந்த விடயம் ஆளுங்கட்சி கூட்டத்தில் பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்.

இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், எனக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அதனை ஆளுங்கட்சி கூட்டத்தில் பேசியிருக்கலாம் என கூறப்படவில்லை. காரணம் பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன், உறுப்பினர் க.விந்தன் ஆகியோரை சந்தித்த இந்த ஜிஞ்சர் குறூப், முதலமைச்சரை பழிவாங்க முதலில் ஐங்கரநேசனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு உதவும் படியும் கேட்டுள்ளனர்.

இவர்களை கொண்டு எப்படி தெரிவு குழுவை உருவாக்க முடியும்? மேலும் சீதை தீ குளிக்க வேண்டும் இராமர் பாக்கதான் வேண்டும் என அவை தலைவர் நீங்கள் இந்தச் சபையில் கூறினீர்கள். சீதையை தீ குளிக்குமாறு இராமன் கேட்கலாம் வாலிகள் கேட்க முடியாதே என கூறியதுடன் எனது அரசியலை அஸ்த்தமனமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் எனவும் சபையில் கூறினார்.

Related Posts