- Thursday
- August 13th, 2026
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும்,...
யாழ் போதனா வைத்தியசாலையில் ஜுலை மாதம் 8 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான தடையுத்தரவு தொடர்பான வழக்கு முடிவடையும் வரையில் அந்தத் தடையுத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீடித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பூரணமான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்படும் என...
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வயோதிபர் ஒருவர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. வவுனியா தெற்கு பிரதேச சபையின் ஓமந்தை உப அலுவலகத்திற்கு முன்னால் தா.மகேஸ்வரன் என்ற 73 வயதான வயோதிபர் இவ் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம்...
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...
வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய் கூறியுள்ளார். சைக்கிளொன்றில்...
வட மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வட மாகாண சபையுடனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் இது தொடர்பான விவரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) தெரிவித்துள்ளார். வடக்கில் மக்களைக் மீள்குடியேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வட மாகாண...
திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே...
வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஷ்பிரயோக கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. ஆறு மாதங்களாக இந்த சந்தேக நபர் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விளக்கமறியலில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்து அவரைப் பிணையில்...
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கிணங்க யாழ் மாவட்டத்தில் கலாச்சார மண்டபத்தினை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் ரூபா. 1.7 பில்லியன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு ஏற்ப யாழ் மாவட்டத்தின் கலாச்சார நிலையம் யாழ் பொது நூலகம் மற்றும், புல்லுக்குளம் நீர்நிலையை அண்மித்ததாக இது நிறுவப்படவிருக்கின்றது. இந் நிலையம் வெளி மேடைகளின் மூலம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக்...
மாற்றுத் திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத் திறனாளி சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, இவர்கள் நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து நேற்று...
ஈராக் தலைநகரான பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவால் இங்குள்ள வளர்ச்சியடையாத சிசுக்களை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று...
இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள்...
சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள...
அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினர். அதே போன்று, வன்னி சிற்றரசின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கெதிராகப் போரடினர்....
கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த தமிழ் - சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இந்நிலையில், ஜூலை...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வௌியிட்டுள்ளார். அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள்...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்சேசன்துறை பகுதியில் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
