Ad Widget

முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை: புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வௌியிட்டுள்ளார்.

jaanaga-ganaka-rathnayakka-1

அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து, நேற்றையதினம் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல் நிலையை சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் குறித்த பிரேரணையினை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts