- Thursday
- August 13th, 2026
ஸ்ரீலங்காவில் 2005 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்காமையினால் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோரை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமையே இறுதிக்கட்ட யுத்த்தின்...
யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த காணாமல் போனோர் ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதியன்று நிறைவுக்கு...
இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுனாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவூச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு...
மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச்...
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்குற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு...
அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்கிடமாக ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த அரசியல் கைதியை உடனடியாக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் கோரியதையடுத்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....
அரச கணக்குகளிலிருந்து மறைத்து வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் 3பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின்முன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு முன்னிலையாகவேண்டுமென சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியென்றும் அவர் பாராட்டினார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்...
புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம் எனவும் குதர்கமாகப் பேசியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் குழுநிலைக் கூட்டம் கடந்த 9ஆம் திகதி...
யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான விசேட நடமாடும் சேவை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ் விசேட நடமாடும் சேவை இடம்பெறும் என யாழ் மாவட்ட...
யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டமை...
ரயில் மீது மேற்கொள்ளப்பட கல்வீச்சு தாக்குதலில் பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் ரயில், திருகோணமலை மற்றும் சீனக்குடா ஆகிய பிரதேசத்துக்கிடையில் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சிலேயே பயணியொருவர் காயமடைந்துள்ளார். இதற்கு முன்னரும் கிளிநோச்சி பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்...
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு...
கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே...
யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று (10) மாற்றுவலுவுள்ள பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் – மேலும் அவர்...
தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில்...
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான எனது அனுபவம், ஆற்றல் காரணமாகவே, நான் ஈ.பி.டி.பி கட்சியைச் சார்ந்தவராக இருந்தும், முதலமைச்சர் தன் சார்பாக அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி கோரியிருந்தார் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா கூறியுள்ளார். அவ்வாறான அவரினது கோரிக்கைகளிற்கு நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேனேயன்றி, அவர் சார்பாக கழியாட்ட...
காணாமற்போனோர் அலுவலக அமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் உடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதனை நிறைவேற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.இதனால் பாராளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாற்பண்ணையாளர்களுக்கான வயல் விழா யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று வியாழக்கிழமை (11.08.2016) நடைபெற்றது. பண்டத்தரிப்பில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கிவருகிறது. குறிப்பாக, பசுக்களில் பால் சுரப்பைப் போசாக்கான உணவின்மூலம் அதிகரிக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
