- Thursday
- August 13th, 2026
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 153 பேர் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு அதி வேகமாக எச்.ஐ.வி தொற்றால் வீக்கம் ஏற்படுவதாகவும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அதனை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு தாக்கம் அதிகரித்த நிலையில்...
இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் திகதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வயதுக்கு வந்தும்கூட வாக்காளராகப் பதிவு செய்ய முடியாதிருப்பதாக முறையிடப்பட்டிருக்கின்றது. ஜுன் மாதம் முதலாம் திகதி, 18 வயதை...
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன...
நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக...
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில்...
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த ஆலயம் அமைக்கப்படுதல் உட்பட வடக்கில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும், இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்து பேசவும், ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டவாறு இடம்பெறும். திகதி: 13-08-2016 (சனிக்கிழமை) நேரம்: பி.ப 4.00...
யாழ் குடாநாட்டில் உள்ள கோவில்களில் மிருக வேள்விக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அந்தத் தடையுத்தரவை இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்...
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்தமை தொடர்பாக எனக்கு ஒரு தகவல்களும் தெரியாது.வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னதாகவே அறிந்தேன். எனக்கும் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கூறியுள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)...
மிருசுவிலில் எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியி்ன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார். மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி...
ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த 73 வயதான தா.மகேஸ்வரன் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது போராட்டத்தைக் கைவிட்டார். வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம்...
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக குறித்த நாளிதழுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...
வலியைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக யாழ்ப்பாண இளைஞர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக பெருமளவிலான போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்படுவதும் அவைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால் அதிகளவிலான இளைஞர்கள் வைத்திய சாலைகளில் வலியின் அதிகத்தால்...
புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வரவிருகின்றார்.
"பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்." இவ்வாறு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:- "நாம் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்துச்...
நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார்....
நோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார். மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற...
கொழும்பு சர்வதேச நிதி நகரத்திற்கான (துறைமுக நகரம்) முத்தரப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. நேற்று (12) கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மூன்று தரப்பினர் இதில் ஒப்பமிட்டுள்ளதுடன், தற்போதைய அரசினால் இது நிதி நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மா நகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை...
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும்...
கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
Loading posts...
All posts loaded
No more posts
