Ad Widget

தமிழினிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கும்போதே புற்றுநோயாம்!

இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக குறித்த நாளிதழுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழினி தனது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டதாக எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை. அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலத்திலேயே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதை உணர்ந்துகொண்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது விச ஊசி ஏற்றப்பட்டதாக ஐநாவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இப்படியான பிரச்சனைகள் வரவில்லை. செப்டம்பர் மாதம் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் விச ஊசி பற்றி பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts