Ad Widget

கிளிநொச்சியிலும் லைக்காவின் நிதிப் பங்களிப்புடன் மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

event-12082016-1

விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் நடராஜன் மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்திற்கு நிதி வழங்கிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினருக்கும் சந்திரிக்கா அம்மையார் தனது உரையில் நன்றி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சந்திரிக்கா அம்மையார் குறிப்பிடுகையில், இப்போதுள்ள அரசாங்கத்தின் மூலம் இரண்டும் பிரதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிற்கான அபிவிருத்தி மற்றும் காணாமல் போனோரை கண்டறிதல் ஆகிய இரண்டுமே இதுவாகும்.

event-12082016-2

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாரிடத்தில் சென்று காணாமல் போனவர்கள் என பல்வேறு தரப்பினர் தமது உறவினர்களை தேடி வருகின்றனர். இவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

நல்லிணக்கத்திற்கான அமைப்பின் பிரதான வேலைகளாக, பல திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமான மழை நீர் சேமிப்பு திட்டத்தினையும் குறிப்பிடலாம். பாடசாலை மாணவர்களிற்கு இடையில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்புடுகின்றது, தமிழ் – சிங்கள் – முஸ்லிம் இனங்களிற்கு இடையில் இவ்வாறான நல்லிணக்கம் ஏற்படுத்தப்புடுவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- என்றார்.

Related Posts