- Thursday
- August 13th, 2026
தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராசாவிற்கு விச ஊசி ஏற்றப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படவில்லையென யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இராசையா ஆனந்தராசாவிற்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வைத்திய பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் மனதளவில்...
காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த சன்முகராஜா துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுமார் எட்டுமணியளவில் வீட்டில் இருந்த நிலையில் குறித்த சிறுமி காணமல் போயிருந்தார். இதனையடுத்து...
முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, இந்தியாவின் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மற்றும் மனந்தவாடி துணை கலெக்டர்களினால், மனந்தவாடிக்கு அருகில் உள்ள கம்பமால கொலனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'குறித்த அகதிகள், அங்குள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்....
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு கண்ணிவெடி வெடிப்புச் சம்பவங்களில் ஒரு கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்தோடு, மற்றொரு சம்பவத்தில் பொது மகன் ஒருவர் பலியாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12 திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத்...
சிறிசேன - ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலக சட்ட மூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியமை உலகத் தமிழர் பேரவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அந்த அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது குறித்து உலகத்...
கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும்...
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்பு படையினர்...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது...
யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என, காணாமல் போனோரின் உறவினர்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறுவதாக, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தானது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை...
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வு பூர்வமாக...
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்....
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக வெளிவரும் தகவல்களையடுத்து வடக்கு மாகாண சபையால் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் 12ஆயிரம்...
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவ வீரர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளார். தருமபுரத்தில் குடும்பமொன்று தமது வாழ்வாதாரமாக கோழி வளர்த்து வந்தனர். இந்நிலையில் இந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்கருகிலிருந்து காவலரணில் காவலிலுள்ள இராணுவ வீரர் ஒருவர் ஒருநாள் இவர்களின் வீடு புகுந்து கோழியைத்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற இராசையா ஆனந்தராசாவை நேரில் சந்தித்து கலந்துரையாடியபோதே...
ந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளை அம்பனைப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை திறந்துவைத்துள்ளது. இந்நிகழ்வானது, பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த நிறுவனத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வுக்கு, சிறுவர் மற்றும்...
உரிமையாளர்கள் அல்லாத, அல்லது உரிமை கோரப்படாத பணம், காணி என்பவை அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் அற்ற காணிகள் மற்றும் உரிமை கோரப்படாது வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதிமோசடி விசாரணைப்...
ரயில்களில் பயணம் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர் அண்மையில் பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளார். அதன் பின்னரும் இவ்வாறான தாக்குதல்கள் தொடருவதால், பயணிகள் பலர் மிகுந்த அச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இதனைத் தடுத்த நிறுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ...
Loading posts...
All posts loaded
No more posts
