Ad Widget

முகமாலையில் கண்ணிவெடி: ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு கண்ணிவெடி வெடிப்புச் சம்பவங்களில் ஒரு கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்தோடு, மற்றொரு சம்பவத்தில் பொது மகன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12 திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் இறந்த நிலையில் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றப்படாத ஆபத்து மிக்க குறித்த பிரதேசத்துக்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து அதன் மருந்தை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இறந்த பகுதிக்கு டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு 29 வரையான ரங்கன் ரக கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இதன் போத அவரின் உடலின் அருகில் 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரை காணவில்லை அவரது மனைவி, 13 திகதியன்று பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகமாலை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பிரிதொரு சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த எஸ். மகேஸ்வரி என்பவர் படுகாயம் அடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிசை பெற்றுவருகின்றார்.

குறித்த பெண், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவருடைய ஒரு கண் முற்றாக இழந்த நிலையிலும் ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலில் மிகப்பெரும் காயத்துடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts