தமிழ், முஸ்லிம் மாணவக் குழுக்களிடையே மோதல்!

அம்பாறை மாவட்டம் கல்முனையில் உயர்தரம் கற்கும் தமிழ் மாணவக் குழுவுக்கும், முஸ்லிம் மாணவக் குழுவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என கல்முனைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயர்தரக் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்வி கற்றுவிட்டு வீட்ட்டுக்குத் திரும்புகையிலேயே குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச்...

2009ஆம் ஆண்டு புலிகளை ஏமாற்றி சரணடையவைத்த றோ!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது சரணடையும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கமாட்டார்கள் என இந்தியாவின் றோ அமைப்பு நம்பிக்கை அளித்ததாக நீனா கோபால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகவியலாளரான நீனா கோபால் எழுதிய ‘ராஜீவ்காந்தி கொலை’ என்ற நூலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு மே மாதம்...
Ad Widget

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது!

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது என புற்றுநோய் நிபுணத்துவ வைத்தியர் மகேந்ர பெரேரா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனவர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டு புற்றுநோய் உருவாக்கப்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டபோதிலும், ஊசிமூலம் புற்றுநோயைப் பரப்பமுடியும் என்று இதுவரை உலகத்தில்...

மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்த 17 பேர் கைது

குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் பிணையில் விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளராக இருந்த வே.தயாநிதி என்ற தயா மாஸ்டர் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதனால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய...

மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு பரிசோதிக்கப்படும்

மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு வர்ணங்களில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விதி முறைகளை கடைபிடிக்கத் தவறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதற்கான கிரபிக் லயிட் ஸ்டம் லேபிள் முறையின் கீழ் மென்பான போத்தல்களில்...

யாழில் அமெரிக்க வைத்தியக் குழு

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை வௌிப்படுத்தும் முகமாக நேற்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளனர். இவர்கள் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வலளால் - இடைக்காடு மகா வித்தியாலத்திற்கு சென்று அங்கு நடமாடும் மருத்துவ சேவையினையும் வழங்கினர். யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்...

ரயில் மீது கல் வீசியவர்கள் விளக்கமறியலில்

கொழும்பு - கோட்டையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலுக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலால்...

மாத்தையா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என, இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் நீனா கோபல் குறித்த நூலை எழுதியுள்ளார்....

நான் அப்படிச் செய்யவில்லை! கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். யுத்தத்திற்காக விமானங்களைக் கொள்வனவு செய்த வேளை, அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய நிதி மோசடி செய்தார் என சந்திரிக்கா நேற்றையதினம் குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து, கோட்டாபய இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையில் பொலிஸாரினால் திருநங்கைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

இலங்கையில் வாழும் திருநங்கை (Transgender) சமூகத்தினர் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்நிலை தொடர்பான சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவைக்காத ஏனையவர்களும் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பால்நிலை தொடர்பான நெறிமுறைகளுக்கு இணங்கி ஒழுகாத நபர்கள் தன்னிச்சையான தடுப்பு வைப்பு, துன்புறுத்தல் என்பவற்றை எதிர்கொண்டு வருவதாகவும், தொழில், வீட்டு...

சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு...

சிவகரன்,அனந்தி ஆகியோரது உறுப்புரிமை பறிப்பு!

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில்...

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம்!

இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்ற காலை 9.00 மணியளவில் இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் இந்தியத் தேசியக் கொடியினை ஏற்றி, குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் இன்னிசைக்...

ரயில் மீது மீண்டும் கல்வீச்சு

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த ரயில் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு பிரிவு படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில மத்தியில் உள்ள ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் விவகாரம்: விஷேட வைத்தியர்களுடன் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்காக விஷேட வைத்தியர்களுடன் மூன்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி, இவர்களை பூரண வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலான உண்மைத் தன்மை பற்றி மட்டுமே ஆராயப்படவுள்ளது...

நாமல் மீண்டும் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆடைத் தொகுதியில் பிரபாகரனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த துணி...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை...
Loading posts...

All posts loaded

No more posts