Ad Widget

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது!

ஊசி மூலம் புற்றுநோயை உருவாக்கமுடியாது என புற்றுநோய் நிபுணத்துவ வைத்தியர் மகேந்ர பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், புனவர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டு புற்றுநோய் உருவாக்கப்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டபோதிலும், ஊசிமூலம் புற்றுநோயைப் பரப்பமுடியும் என்று இதுவரை உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் பதிவாகவில்லை.

புற்று நோய் ஏற்பட்ட ஒருவரினால் மற்றுமொருவருக்கு எந்த வகையிலும்தொற்றாது. ஊசி ஏற்றி புற்று நோய் பரப்பப்பட்டதாக புலம்பெயர் சமூகம் பிரச்சாரம் செய்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts