- Thursday
- August 13th, 2026
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பரிசோதிக்க சர்வதேச ரீதியான தலையீடு தேவையற்றது என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வைத்தியர்களை அழைத்து வர முன்னர் வடக்கிலுள்ள வைத்தியர்களுக்கே அது பற்றி பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர். குறித்த பிரதேசத்தின் 4 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கமுடியுமெனவும், ஏனைய 16 ஏக்கர் காணிக்கு இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மக்களை அவர்களது போராட்டத்தைக்...
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன்மூலம், பெரும்பான்மையின பொலிஸ் உத்தியோகத்தர்களை விட திறமையாக செயற்படும் தமிழ் உத்தியோகத்தர்களின் திறமைகளை, மழுங்கடிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த மாத காலமாக பருத்தித்துறை, இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல் மார்க்கமாக...
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை எவரேனும் கை நீட்டிக் கதைக்க முடியுமா ? அவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு மைக் வீசி தாக்குவேன் என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அந்த அமர்விலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
வடமாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி வடமாகாண முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை கடும் வாத பிரதிவாதத்தின் பின்னர் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (16) காலை கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இம் அமர்விலேயே பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் திகதி...
காரைநகர் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, தற்கொலை செய்துள்ளார். பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கோ வண்புணர்வுக்கோ அவர் உள்ளாகவில்லை என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்தெரிவித்தார். காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த மாணவியான சண்முகராஜா குருக்கள் துவாரகா (வயது 17), அதே பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (14)...
அனுராதபுரம் விமானப் படை முகாமின் மீது தாக்குதல் நடத்தி 400 கோடி ரூபா நஸ்டம் ஏற்படுத்தியதோடு, 14 படையினர் மரணிக்கவும் காரணமாக இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றம்சாட்டப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2007ம்...
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, ஆலயச் சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், தெரிவித்தார். நல்லூர் ஆலய மஹோற்சவம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகி...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், ஆறு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அறுவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 21ம் திகதி காத்தான்குடி கடற்பகுதியில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக...
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து...
கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணியை இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு வழங்கவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கதிர்காமம் - நாகதீபம் பகுதிக்கு அருகிலுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமேவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கதிர்காம நகரிலுள்ள ஆலய வளாகத்திற்கு நேற்று பிற்பகல் வந்த மக்கள் போராட்டத்தினை...
கிளிநொச்சி - பரவி பாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாம் எல்லைக்குள் இருக்கும் தமது இடங்களை வழங்குமாறு கோரி, அப் பகுதி மக்கள் இன்று தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 13ம் திகதி முகாமுக்கு முன்னாள் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்தனர். இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் தமது நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், குறித்த...
இந்த வருடம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடாந்தம் 4 இலட்சம் மாணவர்கள் வரை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சுட்டிக்காட்டிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார, இதுவரை இரண்டு இலட்சம் மாணவர்கள் மட்டுமே அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், குறிப்பிட்டார்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மீது விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற ஆசனம் தொடர்பாக வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் ஒலிவாங்கியை தூக்கிவீசுமளவுக்கு கலகமாகியது. இதனால்...
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் இன்னமும் தம்வசம் வைத்துள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்தும் அடுத்து வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு முன்னர் அவற்றை விடுவிப்பதற்கான கால அட்டவணை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிவில் அதிகாரிகளிடம் நேற்றுத் தெரிவித்தார். இதன்...
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் மக்கள் யாரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்- ”வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே...
தமிழர் தாயக பூமியில் பௌத்த விகாரைகள் அமைப்பதும், பலவந்தமான சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்களின் கலாசார உரிமைகளைப் படுகொலை செய்வதற்கு சமனாகும் என்று ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே மிகச்சிறந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், உரிய தீர்வை...
யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் கொழும்பு செல்லும் இரவு நேர தபால் ரயில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை தாண்டியதும் ரயில் எஞ்சினின் பிரதான முன்விளக்கைத் தவிர அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே நீண்ட நேரம் பயணிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் இந்த இரவு நேர தபால் ரயில் மீது ஆங்காங்கே நடைபெறும் பலத்த கல்வீச்சு மற்றும் அநுராதபுரம் ரயில்...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்குக் கிழக்கில் 3000 வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளது. இதற்கான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவாகியுள்ளன. யுத்தத்தினால்...
Loading posts...
All posts loaded
No more posts
