- Thursday
- August 13th, 2026
மனநிலை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கைவிலங்கிடப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆவது வார்ட்டில் 19ஆம் இலக்கக் கட்டிலில் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இராசையா ஆனந்தராஜ் தனது விடுதலைக்காக பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த கைதியை...
வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள மக்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் காணிகளையும், இந்து ஆலயங்களின் காணிகளையும் ஆடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது...
வடமாகாணசபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழரசு கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி...
யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடானது நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை வடக்கில் அதிகரிப்பதற்காக இந்த மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண...
இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன்...
கிராம சேவை உத்தியோகத்தர்களின் மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. நாடு பூராகவும் 858 மத்திய நிலையங்களில் இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதுடன், அதற்காக ஒரு இலட்சத்து 9021 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் பரீட்சைக்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் - மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்...
கடந்த இரண்டு வருட காலத்தில் மாத்திரம் சுமார் 217.37 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் யாழ். மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் பொலிஸாரினால் 756.358 கிலோகிராம் எடையுடைய 151.27 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த காலப் பகுதியில்...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 640 ஏக்கர் காணி அடுத்த வாரம் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படுகிறது. வலி. வடக்கில் 1500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் இதையடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியார்ச்சி பலாலி வந்து மாவட்டச் செயலர் மற்றும் படைத்தரப்புகளுடன் கலந்துரையாடினர்....
நீர்வேலிச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமானார். இச்சம்பவம் நேற்று ( புதன்கிழமை) இரவு 8 மணிக்கு இடம்பெற்றது இதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த கந்தையா வேலாயுதப்பிள்ளை( வயது-78) என்பவரே மரணமானவர் ஆவர் இவர் நீர்வேலி சந்திப்பகுதியில் பொருட்களை வாங்குவதற்காக வந்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட சமயம் யாழ்ப்பாணம் நோக்கி...
புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியொன்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ”நண்பேண்டா” என பெயரிடப்பட்டுள்ள குறித்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இசைக்கலைஞர் , இயக்குனர் , பாடகர் என பல முகங்களைக் கொண்ட கங்கை...
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே...
இலங்கையர்களில் 80 சதவீதமானோர் 'நேரமில்லை" என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று நற்குண முன்னேற்ற அமைப்பு...
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை. என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் 200 பேர் காணாமல்போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான யஸ்மின் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பிரான்சிஸ் அருட்தந்தை தமக்கு வழங்கியதாக யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் சிசேஸ்ட தலைவர்கள் 200பேர் காணாமல்போயுள்ளதாக...
'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின்...
இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால்...
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை...
ஆட் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அறுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
