- Thursday
- August 13th, 2026
இந்நியாவிலிருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவினை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களை பருத்தித்துறை மணல்காடு பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும்...
எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற குடிநீர் போத்தல்களை பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச் செல்லுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜுன் மாதம் 11 ஆம் திகதி வெளியயிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர்...
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக்...
முச்சக்கர வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களின் மூலம் தமிழ் மொழி வாழ்கின்ற அதேவேளையில் பஸ் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ் மொழி வீழ்கின்றது என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் இன்று கலந்து கொண்டு...
இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் காணிகளற்றவர்களாக 936பேர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 971 வீடுகளைக் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 104 வீடுகள் பலாலி...
சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் பிணையில் சென்றிருந்த எதிரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்க்கண்டு...
சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளனர் எனக் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் ஒரு தகவல் கூறப்பட்டது....
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் விஸ்தீரணமாக காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள காணி மாவட்ட செயலாளர் ஊடாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இக்காணி விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட்டதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டமுள்ள ஒரு நாட்டில் எவருக்கும் உரிமையற்ற சொத்துக்கள் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். உரிமை கோராமல் இந்தப் பணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...
சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
ஆசிய வலய நாடுகளில் கல்வியில் இலங்கை முதலிடம் வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பெக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசியரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவும் கல்வியமைச்சு பல வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான பயணம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயிலுள்ள தெற்காசியாவிற்கான ஆசிரிய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்காசியாவிலுள்ள...
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...
கொட்டாஞ்சேனை, வாசல மாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 47 வயது தந்தை, 13 வயது மகள் மற்றும் 09 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் விஷமருந்தியிருப்பதாக அயலவர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும்...
எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், 50 ஆயிரத்து 701 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளனர்.இதில் 421 பேர் விசேட திறனுடைய விண்ணப்பதாரிகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இரண்டாயிரத்து 959 பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சையின் பொருட்டு, மாணவர்கள் நேரத்துடனே பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க...
மதிய உணவு அருந்திய பின் நித்திரை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தினை சேர்ந்த ஜகோன் உதயகுமார் (வயது 36) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். மதியம் உணவு உட்கொண்ட பின் நித்திரைக்கு சென்ற குடும்பஸ்தர் மாலை...
சங்குவேலி பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். சுன்னாகம் சபாபதிபிள்ளை முகாமிற்கு அண்மையில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சபாபதிபிள்ளை முகாம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்குமிடையில் மோதல் காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று சபாபதிபிள்ளை முகாம்...
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை...
யாழ். பல்கலைக்கழகத்துக்கு, 8 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பருத்தித்துறை - மருதங்கேணி வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினரால், புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மாவை. சேனாதிராஜா...
முன்னாள் புலிப் போராளிகளுக்கு, புனர்வாழ்வு நிலையங்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதனால் அவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். தெல்கொடையிலுள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கிலுள்ள மக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
