திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரியுடன் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வந்தார். இரவுப் பொழுதை திருப்பதியில் கழித்த அவர்கள் நேற்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு...

யாழில்‬ இடம்பெற்ற ‪அமெரிக்க மருத்துவ முகாமில்‬ 2500 ‪மேற்பட்டோர்‬ ‪நன்மை‬ பெற்றனர்

‎அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க விமானப் படை மருத்துவக் குழுவின் மருத்துவ முகாமில் 2500 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இறுதிநாள் மருத்துவ முகாமில் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர். இந்த மருத்துவ முகாம் அச்சுவேலி...
Ad Widget

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான நடைபயணம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய...

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை!

முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார். சிறீலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கமையவே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அண்மைக்காலமாக, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிஜாப்...

புகையிரதம் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும்!

புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்....

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் : தங்க நகைகள் அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

‘காணிகளை விடுவிக்காவிடின் எதிர்க்கத் தயாராகுங்கள்’

'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....

அரசியல் விஞ்ஞான வினாத்தாளில் அரசியல் புகுந்தது

நடந்து முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான இரண்டாம் பகுதி வினாத்தாளில், அரசியல் புகுந்து விளையாடிவிட்டதாக அப்பாடத்துக்கான பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் விசனம் தெரிவித்தனர். இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 7 மற்றும் 8ஆம் வினாக்கள் இரண்டும், தற்போதைய அரசாங்கத்தை இலக்குவைத்தே கேட்கப்பட்டிருந்ததாக அம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தக் கேள்விகள் ஒன்றில், அரச...

குடாநாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேண பறக்கும் பொலிஸ் படையணியை உருவாக்க அறிவுறுத்தல்!

யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். யாழ்.குடாநாட்டுக்கான பிரதி...

வடக்கின் தேவை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பங்கேற்பார்!!

வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், இதில் வடக்கின் தேவைகள் சம்பந்தமாக...

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகள்

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கிளிநொச்சி பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

கிளி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த கோவில் கட்டுமானப்பணி உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பது உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் தீவிரமாகியுள்ள பௌத்த சிங்கள மயமாக்கல் நோக்கில் ஸ்ரீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (22-8-2016) நடைபெறும் நடைபயணத்திற்கு தமிழ்த்...

வடக்கு கால்நடை அமைச்சின் நடமாடும் மருத்துவசேவை

வடக்கு மாகாண கால்நடை அமைச்சின் முதலாவது நடமாடும் மருத்துவசேவை நேற்று முன்தினம் (20.08.2016) மன்னாரில் நடைபெற்றுள்ளது. நானாட்டான் மோட்டைக்கடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற இந்நடமாடும் மருத்துவ சேவையை வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 34...

கனகாம்பிகை புத்த விகாரை அமைப்பை கண்டித்து கிளிநொச்சியில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு

கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...

வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு

முன்னாள் போராளிகள் மனம் தளராது மன தைரியத்துடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்....

விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழமை விக்னேஸ்வரன் நடாத்துகிறார்!

விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடாத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சியிலும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இங்கே விடுதலைப்புலிகள் பொங்குதமிழ் நிகழ்வுகளை நடாத்தியதாகத்...

யாழில் முதலீட்டாளர் மாநாடு, ஆளுநர் முதலமைச்சருக்கிடையில் முறுகல்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடாத்தப்பட்டால் அது முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்...

சட்டவிரோத மண் அகழ்வாளர்களால் தாக்கப்படும் பொதுமக்கள்

யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களால், அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் அவர்களால் அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியுள்ள மணியந் தோட்டம், உதயபுரம், பூம்புகார்,...

முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவக்குழு மறுப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின்...

யாழ் பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே...
Loading posts...

All posts loaded

No more posts