Ad Widget

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை!

முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார். சிறீலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கமையவே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

அண்மைக்காலமாக, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிஜாப் உடைகளை அணிந்து பல சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றுவருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே குறித்த ஆடைகளைத் தடைசெய்யவேண்டுமெனவும் அந்த அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்த யோசனையை சிறீலங்காப் பிரதமர் நிராகரித்துவிட்டதுடன், இதனால் தமது அரசாங்கத்துக்கு முஸ்லிம் மக்கள் அளித்துவரும் ஆதரவு இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த யோசனை கைவிடப்பட்டுள்ளது.

Related Posts