- Thursday
- August 13th, 2026
நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்துத் தெரியவருவதாவது, நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை...
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளித்த அறுவர், ஆஸி அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த மாதம் 21ம் திகதி இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர்...
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...
மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார்...
இடம்பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள 971 குடும்பங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் போராளிகள், ஈடுபட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவத் தளபதி லெப்டினன்...
யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார். யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில்...
யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது...
மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக விமானம் வடிவிலான விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. நல்லூருக்கு வருகை தரும் மக்கள் குறித்த...
பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம்...
வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்;பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22) காலை 9.30 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் முன்னெடுப்பில், இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த தகவல் பிரிவு ஒன்றும், யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்தல், தொழிற்பயிற்சிகளை...
புற்றுநோயாளர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குவதற்காக வைத்தியசாலைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும்...
வட மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்....
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான பெண் நேற்றய...
முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும்...
மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து...
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் ஐ.நா விசாரணை நடத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முன்வர வேண்டுமெனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ...
பங்கு கொள்வனவு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாமல் அவர்களை இன்று கொழும்பு நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய இருவருக்கும் ரூபாய் 100 லட்சம் பெறுமதியான 4 சரீர பிணைகள் மற்றும்...
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த...
சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
