கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மாவனெல்லை பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாவனெல்லை பகுதியில் இருந்து நேற்று இரவு குறிப்பிட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர்...

கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (24.08.2016) யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்துள்ளார். வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு தொழிலின்போது பனையில் இருந்து தவறி...
Ad Widget

இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் குழுவுக்கு சர்வதேச விருது

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள பொறியியல் படையின் கண்ணிவெடி அகற்றும் மோப்பநாயான “அல்வின்” மற்றும் அதனை கையாளும் லான்ஸ் கோப்ரல் ஜீ. என்.டபிள்யூ.எம். நவரத்ன ஆகியோரின் பெயர்களே இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும்...

மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம்...

9 வயதில் இணையத்தளம் வடிவமைத்த மாணவி!

தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer...

வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்ளாமல் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!

வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார். வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க...

சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டிற்கு தயாராகிறது யாழ் குடாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், யாழ் குடாநாட்டிலும் இதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று பிரதான கட்சியாக எழுச்சியடைந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு...

தெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்ற முயற்சிக்க வேண்டாம் :முதலமைச்சர் சி.வி

வட மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் தன்னிச்சையாக செயற்படாமல், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை செயற்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து தெற்கின் எடுபிடிகளாக தம்மை மாற்ற நினைப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை : சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம்...

இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில்...

நல்லூர் உற்சவ நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய நாளாகப் போற்றுகின்றனர். இந்தப் புனித நாளில் ஏனைய மக்கள் அணிதிரள்வதோடு, யாழ்ப்பாண மக்களும் முழுமையாக அணிதிரண்டு முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நாளில் அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை மூடி விடுமுறை நாளாக...

மிரட்டல்களுக்கு அடிபணியேன்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன். புதிய கட்சியை ஆரம்பித்தே தீருவேன்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கப் போகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமரர் ரணிசிங்க பிரேமதாஸ கட்சிக்குள் இருந்த முக்கிய...

அடுத்த வருடம் முதல் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த...

போராதனை பல்கலை மோதல் குறித்து விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீட மாணவக் குழுக்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்...

விவசாயிகளுக்காக அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். சஞ்சீபன் சாதனை

விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும்...

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பமாகியது

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும்...

செருப்புடன் சென்றவர்களுக்கு பிணை!

நல்லூர் வீதியில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன், இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுமதித்துள்ளார். நல்லூர் ஆலய சூழலில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார், திங்கட்கிழமை (22) இரவு...

வித்தியா கொலை வழக்கு : இன்றும் தீர்வில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை...

உறவுகளை பறிகொடுத்த பெண்ணின் காணியை பறித்து அரச வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...

எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது...
Loading posts...

All posts loaded

No more posts