- Thursday
- August 13th, 2026
வடக்கில் அமைக்கப்படவிருந்த பொளாதார மத்திய நிலையம் தொடர்பில் நிலவிவந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைகளுக்கு அமைய விசேட பொருளாதார நிலையம் ஒன்றுக்கு பதிலாக விசேட பொருளாதார நிலையங்கள் இரண்டை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளத்திலும், மற்றையது...
பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...
சம்பளத்தை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதிக சேவக சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் முதலீடுகள், உற்பத்திகள், வர்த்தகங்கள் போன்றவற்றை மேலும் மேம்படுத்தி அவற்றின் நன்மைகள், மக்களுக்கு வழங்கப்படும்....
சமுர்த்தி திட்டம் மிகவும் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒழுங்கில்லாத நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்ததால் அது திருப்தியளிக்காத...
இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்குமென கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார். அதை நாங்களும் நம்புகின்றோம். தீர்வு கிடைக்காவிடினும், இனவாதம் பேசமால் எமது தீர்வுக்கான திட்டங்களை வடமாகாண சபை நடைமுறைப்படுத்த வேண்டுமென என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் 60 வது அமர்வு இன்றுநேற்று வியாழக்கிழமை நடைபெற்றது போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே...
வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வடமாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் சேவையொன்று இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பருத்துத்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப...
பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி...
வவுனியா - குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்கு சொந்தமான இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக...
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. அவ்வாறு அகற்றும் நோக்கம் இல்லை' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார். இராணுவ முகாம்களுக்கு மேலதிகமாக உள்ள காணிகளே தற்போது விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்தி வைத்துள்ளார். கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, தன்னைத் தாக்கியது பல்கலைக்கழக மாணவர்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விஷேட பாண்ட வரி இன்று முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 35 ரூபாவாகவுள்ள இந்த ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர விலையைப் பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும்...
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...
வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இணைந்து சங்கம் ஒன்றையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து காணாமல் போனோர் சம்மேளனம் ஒன்றையும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வட...
பேராதனை பல்கலைகழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர். பிரதேச செயலரின்...
இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...
ஆயுதம் ஏந்தினோம் அது மௌனிக்கப்பட்டு விட்டது. ஆனால், எமது போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நல்லைக்குமரனின் 24வது மலர் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
