Ad Widget

யாழ் பல்கலைக்கழக மோதல் : வழக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்தி வைத்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலின் போது, தன்னைத் தாக்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என காயமடைந்த சிங்கள மாணவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை கைதுசெய்ய முயன்ற வேளை, அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

அதையடுத்து மேற்படி வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைத்த நீதிமன்றம் மீண்டும் குறித்த வழக்கினை இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேற்படி வழக்கில் கோப்பாய் பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய 03 தமிழ் மாணவர்களும் இன்று (25) மன்றில் ஆஜராகியிருந்தனர்.

மாணவர்கள் சார்பான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் ஆஜராகவில்லை. சட்டத்தரணி சயந்தன் ஆஜராகியிருந்தார்.

3 மாணவர்களும் தலா 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு ஆள்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Related Posts