Ad Widget

கீரிமலை வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகளில் இராணுவத்துடன் முன்னாள் போராளிகள் இணைவு

இடம்பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள 971 குடும்பங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் போராளிகள், ஈடுபட்டுள்ளனர்.

Army_lTTE

இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோரின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியன ஒருங்கிணைந்தும் செயற்படுத்தப்படுகிறது.

இராணுவ வட்டாரங்களின் கருத்துப்படி, இப்பாரிய கீரிமலை வீட்டுத்திட்டம் முதற்கட்டமாக 100 புதிய வீடுகளை நிறைவு செய்யும் வகையில் கூட்டு செயற்திட்டம் முகாமைத்துவ குழுவின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் சுமார் 9 இலட்சம் பெறுமதியாகும். இதுவரை கிட்டத்தட்ட 50 சத வீதம் ஒவ்வொரு வீட்டுத் தொகுதியின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

20 பேர்ச் பரப்பளவில் நிர்மாணிக்கும் இவ் வீட்டில் இரு படுக்கை அறைகள், ஒரு வாழ்க்கை அறை, சாப்பாட்டு பகுதி, சமயலறை, கழிப்பறை மற்றும் ஒரு குளியலறை போன்றன நிர்மாணிக்கப்படுகிறது. அத்துடன் இவ் வீட்டுத் தொகுதியில் ஒரு சமூக மையம், விளையாட்டு மைதானம், முன்பள்ளி, சிறுவர் இல்லம், மீன் சந்தை, பொலிஸ் நிலையம் மற்றும் பல அவசியமான வசதிகளும் காணப்படுகின்றன.

மேலும், ஒரு வாரத்திற்கு முன்பதாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் சென்ற உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க தூதுக்குழு ஆகியோர் குறித்த இச் செயற்றிட்டத்தை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts