Ad Widget

சீ.எஸ்.என்னின் 157.5 மில்லியன், பஷிலின் நிலங்கள் அரசாங்கத்தின் வசம்

சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள காணிகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய கடுவளையிலுள்ள காணியில் பொலிஸ் பயிற்சி மத்திய நிலையத்தையும், மாத்தறையிலுள்ள காணியில் சுற்றுலா பயிற்சி மத்திய நிலையத்தையும் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமானப் படையினருக்கான எட்டு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

விமானப் படை வசமுள்ள தாக்குதல் விமானங்களிள் ஆயுட் காலம் நிறைவடைகின்றதோடு, அதனை வேகமாக பயன்படுத்த முடியாதுள்ளமையால், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts