- Thursday
- August 13th, 2026
மூதூர் படுகொலை சம்பவம் மீதான விசாரணை இன்மையும், குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பும், சிறிலங்காவில் உள்ள நீதிமன்றங்களின் பக்கச்சார்பு தன்மையை பறைசாட்டுகின்ற என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனரீதியான நீதிமன்றம் செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சிங்களவர்கள் சிங்களவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை...
ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சியாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த...
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது எமக்கு நம்பிக்கை அற்று போய்விட்டது. சர்வதேச விசாரணை ஒன்று தான் எமக்கு தற்போது உள்ள நம்பிக்கை. தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு தீர்வு இல்லாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என காணாமல் போனவர்களின் உறவுகள் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்தனர். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று...
துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. குமாரபரம் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய 6 பேருக்குமான தண்டணை வழங்குவதற்கு யூரர் சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்றது என்றால், ரயலட் பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன்,...
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு விஜயம் செய்து, மகளிர் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பலரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது...
நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற படத்தில், நடிகராக அறிமுகம் ஆனார். இதன்மூலமாக, வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற கவுரவம் என்ற படத்தை...
வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்தது என்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது....
திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...
கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலில் உள்ள கற்பாறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில் அகற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன்...
வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இப் பெருந்திருவிழாவில் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும், 25 ஆம்...
யாழ். பல்கலைக்கழகத்தில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை நேற்று நடத்தினர். சம்பள அதிகரிப்பு கேட்டு அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே யாழ்....
எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற இருப்பதால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை...
கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும்...
யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி...
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார். கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால்...
வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய ஒன்றிய,...
சாவகச்சேரி, பெருக்குளம் சந்தியில் சைக்கிளில் சென்றவர்களை உழவு இயந்திரம், புதன்கிழமை (03) மாலை மோதியதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நேற்று தெரிவித்தனர். சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயரூபன் சாரூஜன் (வயது 6), ஜெயரூபன் அஸ்வின் (வயது 1) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். தந்தையுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, உழவு இயந்திரம்...
கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றம், இன்று வௌ்ளிக்கிழமை (05) மரண தண்டனை விதித்தது. 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, வென்ஷர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்தார்கள் உள்ளிட்ட...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியினால் எழுதப்பட்ட ´ஒரு கூர்வாளின் நிழல்´ என்ற நூல் விற்பனை மூலம் பெறப்பட்ட 3,00,000 ரூபாய் வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு இன்று வௌ்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது. குறித்த பணத்தொகையை வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வில் தமிழினியின் கணவர் எஸ்...
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. காரைநகர் வலந்தலைச் சந்தியிலிருந்து களபூமி வழியாக துறைமுகம் செல்லும் பாதையில் (786இலக்கம்) ஊரி பிட்டியோலைக்கு திரும்புகின்ற சந்திக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தினால் சங்கானை தேவாலய வீதியைச்...
Loading posts...
All posts loaded
No more posts
