Ad Widget

கீரிமலையில் மீன்படி துறைமுகம் அமைக்கும் திட்டம் இல்லை

கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கீரிமலை பிரதேசத்தில் மீன்படி துறைமுகம் அமைப்பது தொடர்பான எந்த தீர்மானங்களோ தயார்படுத்தல்களோ தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லை என்றும், வேறு தரப்பினரால் இச்செயற்பாடு இடம்பெறுகிறதா என்பது பற்றி தெரியாதென்றும் கூறினார்.

எவ்வாறாயினும் வட மாகாண அபிவிருத்தியின் கீழ் அந்த மாகாணத்தின் முதலாவது மீன்படி துறைமுகம் மற்றும் இலங்கையின் மிகப்பெரிய மீன்படி துறைமுகம் பருத்தித்துறையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதுதவிர யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் மற்றொரு மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts