Ad Widget

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அரசு முயற்சி

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. குமாரபரம் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய 6 பேருக்குமான தண்டணை வழங்குவதற்கு யூரர் சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்றது என்றால், ரயலட் பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன், அந்த ரயலட் பார் மூலம் தண்டணை வழங்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் அரசியலில் இருந்து வயோதிபர்கள் ஒதுங்காவிடின் இளைஞர் கிளர்ச்சி ஏற்பட வேண்டுமென நல்லிணக்க செயலமர்வில் கருத்து தெரிவித்த மற்றொரு வயோதிப பெண்மணி ஒருவர் கூறுகின்றார்.

இலங்கையில் நடக்கும் அரசியலில் வயோதிபர்கள் தான் பங்காற்றுகின்றார்கள். இளைஞர்கள் யுவதிகள் மற்றும் பெண்களுக்கான வாய்ப்புக்கள் வழங்குவதில்லை.

அரசியலில் இருந்து இளைஞர்களும் பெண்களும் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று அந்தப் பெண் கூறுகின்றார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்க செயலணியின் கருத்தறியும் செயலமர்வின் 05ம் அமர்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (06) நடைபெற்றது.

அந்த கருத்தறியும் செயலமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே இவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

Related Posts