யாழில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார். இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில்...

கடமைக்கு வராவிட்டால் வேலை பறிபோகும்-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

தேசிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், சகல ஊழியர்களும் இன்று கடமைகளுக்கு திரும்புமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல கல்வி சாரா ஊழியர்களையும் விசேட அறிவித்தல் மூலம் கேட்டுள்ளது. இன்று  கடமைக்கு சமூகம் தராத தகுதிகாண் மற்றும் பயிற்சி ஊழியர்கள் சகலரும் தங்களது தொழில்களிலிருந்து...
Ad Widget

முன்னாள் போராளிகள் பரிசோதனைக்குத் தயார்!

னர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வரும் நிலையில், இதுகுறித்த சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கம் இதுகுறித்து உடற்கூற்று பரிசோதனை நடத்துவதற்கு தயாரென தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 800 போராளிகள் தயாராக உள்ளனரெனவும், அரசாங்கம் உடன் இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனநாயக...

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு எதிராக மல்லாகத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரத்தை வழிமறித்து இவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புகையிரத கடவையில் சமீஞ்சை விளக்குகளும் சமீஞ்சை ஒலியும்...

பளையில் சிறுமி துஸ்பிரயோகம் ; விடுதிக்கு சீல் வைப்பு

கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்...

தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபனின் நான்காவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் போராட்டம்...

கவனிப்புக்கும், கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ள மருதங்கேணி!

வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி கல்வியைத் தொடரமுடியுமெனவும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அடங்கிய குழுவினரையும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த சிறீலங்கா அதிபர் சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது மாணவ குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற...

வணக்கதலங்களை புனரமைப்பதை விடுத்து யுத்தத்தால் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை புனரமையுங்கள்

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்கறையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத்...

பரீட்சை முறைகேடுகளை முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம்

பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரியினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய commissionerdoe@gmail.com என்ற மின்னஞ்சலினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் முறைபாடுகளை 24 மணிநேரமும் ஆராய்வதற்கான...

கஞ்சாவுடன் பூசாரி கைது

இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை...

பஸ்ஸில் ஏறிய இளைஞன் பணம் கொடுக்காது ரகளை

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து, புதன்கிழமை (03) இரவு, பருத்தித்துறைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில், மதுபோதையில் குழப்பம் விளைவித்த இளைஞனை, பயணிகளும் பஸ் நடத்துநரும் பிடித்து தங்களிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி பொலிஸார் கூறினர். பஸ்ஸில் ஏறிய இளைஞன், பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான பணம் கொடுக்க முடியாது என நடத்துநருடன்...

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொன்று எரித்தது இராணுவம்!

"இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை...

ரயில் மோதி ஒருவர் சாவு!

மல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகவடிவேல் சிவசங்கர் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற கடுகதி ரயில் மோதியுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம்...

யாழ் பல்கலையில் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு

இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில், 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாட்டின் கருப்...

இந்தியா,இலங்கைக்கு இடையில் பாலம் அமைத்தால் அதை வெடிக்க வைப்பாராம் கம்மன்பில

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்ற 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹசீமிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்த வேளை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

புகையிலைக்கான வரியை 90 வீதமான உயர்த்த முடிவு

புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை...

வித்யா கொலை வழக்கு உட்பட முக்கிய வழக்குகள் யாழ் மேல் நீதிமன்றத்தில்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் மற்றும், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான விசாரணை, மாற்றுத்திறனாளி பெண் மீதான கூட்டுப்பாலியல் வழக்கு, தாதியர் வேலைநிறுத்த தடையுத்தரவு ஆகிய மூன்று...

பொருளாதார மத்திய நிலையம்; 20 பொது அமைப்புக்கள் தீர்மானம் நிறைவேற்றம்

வவுனியாவில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியாவை விடுத்து வேறு மாவட்டத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கூடாது என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பாக தீர்மானத்தினை எடுப்பதற்காக வவுனியா மத்தியஸ்த...

நாடுமுழுவதும் 400 இடங்களில் இருமடங்கு வேகத்தில் WiFi

நாடுமுழுவதும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் 400 இடங்களுக்கு WiFi இணைய வசதியினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 5 நிறுவனங்களிடம் தகவல் பரிமாறப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிநுட்பத்தினூடாகப் பெற்றுக்கொடுக்கப்படும் WiFi வசதியானது இருமடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்...
Loading posts...

All posts loaded

No more posts