- Thursday
- August 13th, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தில், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்களே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை, மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஊடாகவும் பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும்,...
'புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்து வருவதாக, அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இது தொடர்பில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்தியுள்ளார். இதன்போது, அண்மைக் காலமாக உயிரிழக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம்...
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்...
தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். ஆசியாவில் சிறிலங்காவும் தாய்லாந்தும், அதிகளவு தனிநபர் மதுபான நுகர்வில் முன்னிலையில் இருக்கின்றன. சிறிலங்காவில் 35 வீதமான ஆண்களும், 3 வீதமான பெண்களும் மதுபானப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆறு மில்லியன்...
நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, எமது விமான நிலையச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். மன்னாருக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலத்தை அமைக்கும் திட்டமொன்று உள்ளதாகக்...
யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 30 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். படை குறைப்பு குறித்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையினருக்கு பயிற்சிகளை வழங்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை....
யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்ழகத்தின் சில பீடங்கள் தற்போது வரை இயங்காதிருக்கின்றன. குறிப்பாக விஞ்ஞானப்பீடம் இதுவரை...
தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கத்தைத் தலையிடவேண்டாமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில்...
நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் மற்றும் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள்...
போர் குற்றத்திற்கான நீதி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன கிடைக்கும் வரை தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது....
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குமாறு தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும்...
இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவும் என யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் உள்ள பொருளாதார ரீதியான வளர்ச்சி தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளும்...
விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவியான சிவகாமி ஜெயகுமாரன் (தமிழினி) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்ற புத்தக பிரதிகளின் விற்பனை ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தில் 3 இலட்சம் ரூபாய், மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து அவரது கணவர், வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளனர்....
சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அழிவடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த விகாரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில், பிரதேச செயலாளர்களின்...
வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் - மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு...
இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது' என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து...
யாழ். மாநகர சபையில் பணியாற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் தமது தேவைகள் மற்றும் தாம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு நீதி வழங்க கோரி இன்று புதன்கிழமை தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். யாழ்.மாநகர சபை வளாகத்தில் இன்று புதன்கிழமை காலை 7.00 மணிமுதல் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். யாழ்.மாநகர சபையில் வாகன மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இதர...
Loading posts...
All posts loaded
No more posts
