பேருந்து மோதியதால் புகைப்பட ஊடகவியலாளர் மரணம்

யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமானார். புகைப்பட ஊடகவியலாளரான 68 வயதுடைய கந்தையா நவரட்ணம் என்பவரே தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து...

காணாமல்போன வேலனையை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் சரவனை மேற்கு வேலனையை சேர்ந்த பானுசன் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தநிலையில் உறவினர்கள் இவரை தேடியுள்ளனர். இந்தநிலையில் வீட்டிற்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலத்தின் கால் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம்...
Ad Widget

யாழ்.பல்கலைக்கழக மோதல் : மேலும் பல மாணவர்களின் விபரங்களைத் திரட்டுகிறது பொலிஸ்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், மேலும் சில மாணவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர்விபரங்களை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் கோரிப் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக...

முன்னாள் போராளிகளுக்கு ஊசிபோடப்பட்ட விவகாரம்!: பரிசோதனை நடத்த தயார் என்கிறது அரசாங்கம்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலியல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பில் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டால் அவர்களுக்கு உடற்பரிசோதனை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்...

நல்லூரில் கண்காணிப்புக் கமரா!

யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அங்கே கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது. இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர் தமிழர்களும், தெற்கிலிருந்து சிங்கள மக்களும் பெருமளவில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நல்லூரில் பாதுகாப்பும்...

கடத்தப்பட்டவர்களை மீட்டு தருவதாக கூறியவர் பொலிஸ் காவலில் மர்ம சாவு!!

கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது...

பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை!

தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு...

தொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக வட மாகாண ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, தொண்டர் ஆசிரியர்களை நேற்று மாலை சந்தித்த...

வடக்கு மக்களும் எமது நாட்டு மக்களே

வடக்கும் எமது நாட்டின் ஒரு பகுதி தான். அங்கு வாழும் மக்களும் எமது நாட்டு மக்கள் தான். அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது தவறா? என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக...

கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்ப்பு

இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து...

காணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேற்படி காணி அபகரிப்பு நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்களால் புதன்கிழமை (03-08-2016) காலை 9.00 மணியளவில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு எமது கட்சி...

கீரிமலையில் பிதிர்க் கடனைச் செலுத்த திரண்ட மக்கள்

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள். முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர். இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில்...

மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிடுங்கள் ; பூநகரியில் மக்கள் வலியுறுத்து

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின்...

கடத்தி செல்லப்பட்ட இளைஞனை மீட்டு தருவதாகக் கூறி பணம் பெற்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஒருவரை, மீட்டுத்தருவதாக கூறி காணாமற்போனவரின் உறவினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபரை யாழ்.பொலிஸார் திங்கட்கிழமை (01) கைது செய்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நீர்வேலியைச் சேர்ந்த வைகுந்தன் என்ற இளைஞன், தனது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்று ஜந்து வருடங்களின் பின்னர், கடத்தபட்டவரின்...

மாணவனின் சடலம் மீட்பு

நாரந்தணை 8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சரவணை மேற்கு 1 ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

இரண்டாம் நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

இன்று இரண்டாம் நாளாகவும் தொடருகின்றது தொண்டர் ஆசியரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம். வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான நிரந்ததர நியமனங்களை பெற்றுத்தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை நியமனங்கள் கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமக்கான நியமனம் கிடைக்கும்...

பொலிஸ் என அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்

துன்னாலை ஆட்டுப்பட்டித் தெருப்பகுதியில் பொலிஸ் என பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் எனப் பொறிக்கப்பட்ட ரீசேட்டினை அணிந்து கொண்டு 33...

கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இறங்குதுறை அமைக்கும் பணி நேற்று மீண்டும் ஆரம்பம்

கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங்குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் கப்பல் நங்கூரமிடுதல் மற்றும் மீன்பிடி இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. மேற்படி இறங்குதுறை அமைக்கப்பட்டு...

முகாமில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இராணுவத்தினர்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணுவத்தினரே சோதனை செய்ததாக, நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான, மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து பதிவு செய்யப்பட்டள்ளது. வவுனியாவில் நலன்புரி முகாம்களில் இருந்த இராணுவத்தினர், பெண்கள் நீராடும் பகுதியிலும், மலச கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தகாத முறையில்...

வான்களின் விலைகள் பத்து இலட்ஷத்தால் குறைவடைகின்றது !!

வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152...
Loading posts...

All posts loaded

No more posts