- Thursday
- August 13th, 2026
எயிட்ஸ் நோய் தீவிரமாகப் பரவும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தேசிய எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் தீவிரமாகப் பரவக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் 79 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த ஏழு மாத காலப் பகுதியில்...
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம்....
நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால்...
இலங்கையில் ஐஎஸ். பயங்கரவாதியொருவர் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுப்பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவின் திருப்பூரில் அண்மையில் ஐஎஸ் தீவிரவாதியொருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவில் கைதாகிய மஜ்னு என்ற கைதிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என நடாத்தப்பட்ட விசாரணையில், மஜ்னு என்பவர்...
மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனிதப் புதைகுழிக்குச் சற்றுத் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் கிணற்றிலிருந்து, நேற்றுத் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்ட சிறு எலும்புத் துண்டுகள் இரண்டும், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மர்மக் கிணறு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுக் காலை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் போனவர்களின்...
மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. 'பசிக்கு எதிரான செயற்பாடு' அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில்...
முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்....
வட்டுவாகலில் கடற்படைக்காக 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த மக்களை போராட வருமாறு பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்களின் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் தெரிய வருவதாவது முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும்...
நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு கடந்த 31-7-2016 கட்சியின் இல.16, மணல்தரை ஒழுங்கை கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான...
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார்.
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையிலான பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பொலிஸாரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில்...
நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து...
நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான்...
இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும்...
தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயிரிழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்துள்ளார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து...
நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் எடுத்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையை முறியடிக்க வேண்டும்...
சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட தேவையில்லை என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் மீள்குடியேற்ற செயலணி குறித்து...
Loading posts...
All posts loaded
No more posts
