Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனை அவசியம்!

முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

ஒட்டுசுட்டானில் நல்லிணக்க பொறிமுறை செயலணியின் அமர்வின் போது கருத்துக்களை பகிர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தமக்கு கட்டாயப்படுத்தி ஊசி ஏற்றப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதனை கவனத்தில் எடுத்து முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். எமது மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களே முன்னாள் போராளிகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts