வீடுகள் நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்!

இராணுவத்தினரிடமிருந்து காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 2,221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்...

இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிப்பு!

போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது. இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய...
Ad Widget

போலி முகவர்கள் நால்வர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர், யுவதிகளிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்த நான்கு பேரை, பத்தமேனி பகுதியில் வைத்து சனிக்கிழமை (30) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஹயஸ்வாகனமும் ஒரு தொகுதி கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் உட்பட வவுனியா...

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார்....

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் தனியாரிடம் இரத்தப் பரிசோதனை செய்ய தடை

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும். குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

தீப்பெட்டியின் விலை அதிகரிப்பு

தீப்பெட்டி ஒன்றின் விலை, 1 ரூபாவினால் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும்.

உண்ணாவிரதம் இருந்து பிணை வழங்கக் கோருவது சட்டவிரோதமாகும்

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில் போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அமைதியைக் கெடுத்துவிடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் பிணை மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை 2 ஆம் திகதி...

அரச ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனம் வழங்கும் யோசனையில் மாற்றம்

அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் யோசனை திட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சலுகை அடிப்படையில் வழங்கும் வாகனங்களின் அனுமதிப் பத்திரத்தின் பெறுமதி 30,000 அமெரிக்க டொலர்கள் எனவும், முழு வரியில் இருந்து 50 வீதத்தை சலுகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முகமாலையில் வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற...

வடக்கு மீளக் குடியமர்த்தும் செயலணியை நிராகரிக்க வடக்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை!

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கு அக்கறை காட்டாத வடக்கு மாகாணசபை, சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட செயலணியை நிராகரிப்பதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லையென யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவிக்கு வந்தபின்னர்,...

போரில் இடம்பெற்ற சம்பவங்கள் மக்கள் மனதைவிட்டு அகலாது!

இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். "யுத்தம் நடந்தது...

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வரவுசெலவு திட்டத்தில் சாதகமாக கருத்திற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல் உயர் கல்வி லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கிழக்கில் எதிர்ப்பு: நீரியல் வளப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் அமைக்கப்படவுள்ள நீரியல் வளப் பண்ணைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக அப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்படலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பண்ணைக்கு மாவட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் உள்ளுர் மக்களும் வெளியிட்டுள்ள எதிர்ப்புகள் காரணமாகவே...

அவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சேற்று நிலங்கள்...

விபத்தில் வெளிநாட்டு பிரஜை படுகாயம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றயதினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர். அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா பயணியான...

தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான...

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் கூடவுள்ளது. வட கிழக்கு இணைந்த, சுயாட்சியடிப்படையிலான ஒரு சமஷ்டி முறைத்தீர்வு தமிழ்த்தலைமைகளால் உறுதியளித்தபடி 2016 ஆம் ஆண்டிற்குள் வருவதற்கான எந்த ஒரு அடிப்படையும் அற்ற ஒரு வெறுமை நிலையில், உள்ளக விசாரணையில்...

வடக்கில் தொல்லை கொடுக்கும் கொழும்பு நிதி நிறுவனங்கள்

தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, மல்லாவியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றும், சாவகச்சேரி பகுதியிலிருந்து கடன் வழங்கிய...

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது!

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மாத்தளை பகுதிகளில் தமிழர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். விகிதாசார தேர்தல் முறைமையின் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூகமான...

பாதயாத்திரையில் தமிழை படுகொலை செய்த மகிந்தராஜபக்ஷ அணியினர்!

மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கெதிராக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டு இன்று 3ஆம் நாள் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில் மகிந்த அணியினரால் பாதயாத்திரைக்கு முன்னால் தாங்கிவரும் பதாகையில் தமிழ் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இன்றுடன் மூன்றாவது நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிழையைத் திருத்துவதற்கு அவர்களால் எந்தவொரு நடவக்கையும் எடுக்காதது தமிழ் மக்கள் மத்தியில்...
Loading posts...

All posts loaded

No more posts