எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு

தமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், நேற்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள...

ஆடி அமாவாசை விரத தினத்தன்று கீரிமலையில் வழிபட அனுமதியுங்கள்!

இந்துக்கள் தங்களின் புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை. இதனை கடைப்பிடிப்போர் அன்றைய தினம் உணவை சுருக்கி...
Ad Widget

கனடா வெளிவிவகார அமைச்சர் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம்!

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் வடக்கு முதலமைச்சர் க.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் சந்தித்தார்....

த.தே.கூ. உறுப்பினர்கள் மீதான தாக்குதல் வழக்கு: திருமலையில் இருந்து யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு 04.07.2016...

மின்கட்டண பட்டியலுக்கு பதிலாக Smart meter முறை அறிமுகம்

மின்சாரக் கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக Smart meter முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறுகிறார். மின்சாரக் கட்டணப் பட்டியல் அதிகாரிகளின் 24வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன் காரணமாக மின்சாரக் கட்டணப் பட்டியல் அதிகாரிகளின் பதவி மற்றும் சங்கத்தின் பெயர் மாற்றப்பட...

தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமை எம்மீது சமத்தப்பட்டுள்ளது

தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமையில் நாட்டை இழுத்துப்போடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கை தற்போது 09 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். கடந்த ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி இருந்தால் நாடு இவ்வாறான ஒரு நிலமைக்கு...

இரண்டு லட்சம் பேர் கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம்!

இம்முறை கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டவர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி கிராம சேவகர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து...

மகிந்த ஆதரவு அணியினரின் பேரணியின் இரண்டாம் நாள் ஆரம்பமாகியது

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான...

முரளிதரனை அரசாங்கம் அவதூறு செய்கின்றது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள் நட்சத்திர வீரர் முரளிதரனையும் அரசாங்கம் அவதூறு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கண்டி கடம்பே பிரதேசத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வற் வரி, பட்டத்தாரிகளுக்க தொழில் இன்மை, உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் மற்றும் மக்களை...

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், எமக்கான கலைகளை வளர்த்து, கலாச்சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில்...

பாடசாலைக்கு சினிமா பாணியில் ஆயுதங்களுடன் வந்து ரவுடிகள் அட்டகாசம்.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று பட்டப்பகலில் வாள்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கும்பல் ஒன்று மாணவர்கள், ஆசிரியர்களை கடுமையாக அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. பாடசாலையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இந்நிலையில் மோதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் குழுவே மற்றைய குழு மீது...

மல்லாகம் இராணுவச் சிப்பாய் கொலை வழக்கில் எதிரி ஆனந்தராஜா விடுதலை

மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் எதிரி இரத்தினம் ஆனந்தராஜாவை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில் பணியாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார...

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் சாசனம் அவசியம்

நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வைக் காண்பதற்கு நாம் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடத்தில் தெரிவித்துள்ளார். எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவரிடத்தில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித்தலைவர்...

அனைத்து தடைகளையும் தாண்டி கொழும்பை வந்தடைவோம் : மஹிந்த சூளுரை

எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னை வியக்கவைத்துவிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்து சூளுரைத்தார். பொதுமக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் கொள்கையில் நல்லாட்சிஅரசாங்கம் வற் வரியைஅதிகரித்தது. தேர்தலின் போதுவழங்கியவாக்குறுதிகள் மாயமாகிவிட்டுள்ளன எனவும்...

இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது. 'அக்சஸ் யு.கே.' என்­ற­ழைக்­கப்­படும் இந்த இணை­யத்­தள விண்­ணப்பப் படிவம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட தர்க்க ரீதி­யான கேள்­வி­க­ளு­ட­னான குறு­கிய படிவம், எடுத்துச் செல்­லக்­கூ­டிய நட்­பு­ற­வான முறைமை, அனு­ம­தி­யின்றி பய­ணத்தை மேற்­கொள்ளக் கூடிய ஐரோப்­பிய...

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், நோயாளர்களை மருத்துவமனைக்குக்...

கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் யாழ் பல்கலையும் பாதிப்பு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்படி யாழ்.பல்கலைக்கழகத்திற்கான நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசார ஊழியர்கள்...

இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு!!

மன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை வழமைக்குத் திரும்பியது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு...

அதிக பயன்தரவல்ல பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை-பொ.ஐங்கரநேசன்

வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ்...
Loading posts...

All posts loaded

No more posts