Ad Widget

இரண்டு லட்சம் பேர் கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம்!

இம்முறை கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டவர்,

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி கிராம சேவகர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளனர். சுமார் இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக இந்தப் போட்டி பரீட்சை நடத்தப்படுகின்றது.

போட்டிப் பரீட்சையில் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் விண்ணப்பதாரிகள் கிராம சேவகர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

வடக்கு கிழக்கில் அதிகளவில் கிராம சேவகர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts