- Thursday
- August 13th, 2026
வடக்கு கிழக்கு மக்களுக்கும் பாரிய நன்மையினை ஈட்டித் தரத்தக்கதான மொரகஹகந்த - களுகங்கை நீர் விநியோகத் திட்டமானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அந்த வகையில், இத் திட்டத்தை தனது மிக முக்கியக் கனவாகக் கொண்டு, அதனை நனவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக ஈழ மக்கள்...
தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாதென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ”போரானது எம்மை...
அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன ஒற்றுமையை பாதிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையை தோற்றடிக்க செய்ய வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி...
வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது குறித்து கிராமிய...
மற்றுமோரு வழக்குத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளார். நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். கவர்ஸ் கோர்பிரேசன் என்ற நிறுவனத்தின் தலைவராகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ ஹலோ...
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மாபெரும் நடைபவனி சற்றுமுன் கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. [caption id="attachment_67786" align="aligncenter" width="660"] ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.[/caption] முன்னர்...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன், இன்று (வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது, இலங்கை அரசாங்கத்தின பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து கேட்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசனையும் கனேடிய அமைச்சர்...
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச்...
பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில்...
திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று அநுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு...
தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வியாழக்கிழமை (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார். தொண்டைமானாறு உவர்நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள்...
வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பான சர்சை நீடித்து வந்த நிலையிலலேயே இதற்கு முடிவு எடுக்கப்பட்டுளள்ளதாக அமைச்சரை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் மாநாடு...
யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், இன்றைய தினம் (27) புதன்கிழமை பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க கோரியும், சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் இப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இன்று காலை யாழ். பல்கலைக்கழக முன்றலில்...
மாமியரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற போது தனது கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்த மருமகனை, கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்புக்காக, மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச்...
பொலிஸ் பாதுகாப்பு வழங்காமையினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.நாவாந்துறை பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராற்றின் காரணமாக குறித்த இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில்...
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது...
சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் அதற்கு காவல்துறையினர் எதனையும் செய்ய முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முழு அளவில் காவல்துறையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறான ஓர் நிலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர வருகை தராவிட்டால்...
மகாவலி திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் வடமாகாணத்திற்குள் மீள்குடியேற்றப்படலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார். மகாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெய்கா நிறுவனம், மாவலி அதிகார சபை, நீர் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் அதிகாரிகள்...
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் மகளை, மாணவிகள் கேலி செய்தமையால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. சுருக்கிட்டுக் கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் பத்து தினங்களின்...
Loading posts...
All posts loaded
No more posts
