- Thursday
- August 13th, 2026
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவுள்ள உள்ளக நீதிப்பொறிமுறை உட்பட ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான...
உலகிலேயே வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. வாய்ப் புற்றுநோய் தோன்றுவதற்கு வெற்றிலையும் அது சார்ந்த பொருட்களுமே காரணம் என பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெற்றிலை பாவிப்பவர்கள் அதன் பாவனையை முற்றாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் வெற்றிலைக்கு உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலைகளைத் தடுக்கவேண்டுமெனவும்,...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோர்கள் எனக் கூறப்படும் 16,000 பேரின் நிலமை என்ன? எனவும், அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் 14 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் பின்னரே செஞ்சிலுவைச் சங்கம் குறித்த அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்டுள்ளது. 34...
சிறீலங்கா சிறையில் கொடுமைகள் அனுபவித்தோம் என்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 77 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, மத்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று முன்தினம் 49...
மகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியகபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். நேற்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு மாணவர்களுக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் மாதம் 01ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் எஸ். சதீஸ்குமாரினால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தகவல்களுக்கமைய இந்த நோட்டீஸ்...
கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல், தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, எட்டு மணித்தியாலங்கள், விமான நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக, அமைச்சர் சிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். விமான ஓடுபாதையின்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்....
உடுவில் மேற்குப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை, நேற்றுத் திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராற்றில் ஈடுபட்டு இளைஞன்...
மீசாலை, புத்தூர்ச் சந்தியில் திங்கட்கிழமை (25) மாலை வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர், இராணுவ வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்துவில் கிழக்கைச் சேர்ந்த லி.உதயமலர் (வயது 57) என்ற பெண்ணே இதில் படுகாயமடைந்துள்ளார். மீசாலை - புத்தூர்ச் சந்தியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவிருந்த...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஒத்தி வைத்தார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை...
யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவன் பதிவு செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் இவ்வாறு தமிழ் மாணவர்களை கைது செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மாணவர் முதலில் 3 தமிழ் மாணவர்கள்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக...
சுயதொழிலை அடிப்படையாக கொண்டு தாமே யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, ஓர் உற்பத்திப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் பாவிக்கும் சன்லைட் (sunlight) சவர்க்காரம், Surfexel அல்லது சம்போ(shampo)க்கு பதிலாக புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதில் வாசனைக்காக compfort போன்ற ஒரு கலவையயையும் சேர்த்துள்ளனர். இதனால் சலவை செய்யும் ஆடைகள் வாசனையாகவும் இருக்கும். யாழ்ப்பாணம் கல்வியன்காட்டிலே...
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை நேற்று திங்கட்கிழமை கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் சென்ற வயோதிபர் ஒருவரை காரினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு காரில் சென்றவர்கள்...
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சரையும் இன்று காலை 9.30 மணியளவில் கைதடியிலமைந்துள்ள வடக்குமாகாண சபைக் கட்டட அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. குறித்த இச்சந்திப்பின்போதே...
வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாதபட்சத்தில் அது மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி ஓமந்தையில் அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், நேற்று திங்கட்கிழமை (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர், கடந்த வாரம் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி...
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் தொடர்புபட்டிருந்த நிலையில், மாணவி கொலை...
ரயில் பயணத்தில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க ரயில் திணைக்களம் தயாராகியுள்ளது. அதற்கமைய, அபராத தொகையை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிதிபலகையில் பயணம் செய்வது, ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் உள்நுழைவது, ரயிலில் மதுபானம் அருந்துதல், தவறான வழியில் மற்ற பயணிகளை தள்ளிக்கொண்டு வருவது போன்ற குற்றங்களுக்காக அபராதத் தொகையே...
Loading posts...
All posts loaded
No more posts
