சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியாகின

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்த முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை www.doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அறியமுடியும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர்...
Ad Widget

பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் : யாழ்ப்பாணம் வருகிறது ராவணபலய !

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிங்கள பௌத்த தீவிர அமைப்பான ராவணா பலய அமைப்பு யாழ்.பல்கலைக்கழக சூழல் தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாக தெரியவருகின்றது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில்...

வெலிக்கடை படுகொலை தினம் இன்று அனுட்டிப்பு

இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா...

யாழில் தனியார் தொலைக்காடசி நிறுவன வாகனம் விபத்து!! 3பேர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பாரதி வீதி கச்சேரியடியில் தனியார் தொலைக்காடசி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் இன்று காலை 7.15 மணியளவில் தன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பலா மரத்துடன் மோதியது. இதில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அங்கு நின்ற மக்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்

அச்சுவேலி வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சனிக்கிழமை (23) அதிகாலை சிற்றூழியர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து, வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவசரசிகிச்சைப் பிரிவு தவிர்ந்த வெளிநோயாளர் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பிரதான கதவினை மூடி வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சிற்றூழியர் சங்க செயற்பாட்டாளர் இராசேந்திரன் முகுந்தன் கருத்து தெரிவிக்கையில்,...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! மரணத்திற்கு காரணம் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயல்!!

காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில், திரையரங்கு வீதியைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். இணுவில் பகுதியில்...

முத்தம் கொடுத்த இளைஞனுக்கு பிணை

பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார். இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார். தெல்லிப்பழை மணல்குளம்...

விபத்தில் தம்பதிகள் பலி!! குழந்தை படுகாயம்!!

கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற மினிபஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். ஏ-9 வீதியில் கொக்காவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பேட் ஜெயக்குமார் (வயது 24) அவரது மனைவியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர்....

புண்ணிய பூமியில் படகுத் துறையா? எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் திகழும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில், மீன்பிடி...

எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை!

எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும்...

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை!

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பரீட்சை ஆணை­யாளர் எஸ்.பிர­ண­வ­தாஸன் தகவல் தரு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை...

மோதலுடன் தொடர்புடைய மாணவர்களை சிறைவைக்காதது ஏன்?சத்தாதிஸ்ஸ தேரர்

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய என்ற அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய...

தனிமையிலிருந்த சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்

சங்கானையை சிறுவன் ஒருவர் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் இந்த சிறுவனே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளார் இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ்...

வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யுத்தம் மற்றம் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும் ஊடக தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இவ்விருதானது வடக்கு மாகாணத்தைச்...

வடக்கில் முதலீட்டாளர் மாநாடு : புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் உற்சவத்தின்போது வடக்கிற்குப் பயணம் செய்யும் புலம்பெயர் சமூகத்துடன் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு தொகுதிக் காணி விடுவிப்பு!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) அப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து குறித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அத்துடன் மீள் குடியேற்றத்திற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கருகில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார். பலாலி உயர் பாதுகாப்பு...

6 கிலோ கிராம் போதைப்பொருள் சிக்கியது : ஒருவர் கைது

உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர், சனிக்கிழமை (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில்...

ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சனிக்கிழமை மாலை பயணித்த ரயிலில், யாழ். கோண்டாவில் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்ட 70 வயதான வயோதிபர் ரயிலில் மோதுண்டுஉயிரிழந்துள்ளார். அவ்வாறு பலியானவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.

எரிபொருள் விநியோக குழாயில் வெடிப்பு; எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோக குழாயில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் நேற்று இறக்கப்படும் போது குறித்த குழாய் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. லங்கா மசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர்...
Loading posts...

All posts loaded

No more posts