போக்குவரத்து விதிமுறையை மீறிய பெண்ணுக்கு 22,500 ரூபாய் தண்டம்

போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை...

ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில்...
Ad Widget

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சகல பட்டதாரிகளுக்கும் விரைவில் வேலை வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி, அகில இலங்கை பட்டதாரிகள் சங்க சமூகத்தின் செயலாளர் தம்பிக்க முனசிங்க தலைமையில் இந்த பேராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின்...

கண்டிய நடனம் புகுத்தியமையே மோதலுக்கு காரணம்!-டி.எம். சுவாமிநாதன்

யாழ்.பல்கலைகழகத்தில் வழமைக்கு மாறான நடைமுறை மேற்கொள்ளப்பட்டதே மாணவர்களுக்கு இடையிலான மோதலுக்கு காரணம் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிப்பின் இந்த மோதல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு...

தமிழ் படைச்சிப்பாயின் தாக்குதலுக்குள்ளான தந்தையும்,மகனும் வைத்தியசாலையில்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு...

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது....

மத்திய அரசின் கையாட்களாக இயங்கமுடியாது: வடமாகாண முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென்...

பாடசாலைக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியை சேர்ந்த (டிப்போ பின்பகுதி) மவிது நின்சர என்ற எட்டு வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான் மேலும் நேற்றைய தினம்(22.07.2016) காலை பாடசாலைக்கு சென்ற சிறுவனை காணவில்லையென பெற்றோரால் தேடப்பட்டுங்கொண்டிருந்த போதே அதேபகுதியில் இரவு ஒன்பது மணியளவில் கிணறு ஒன்றினுளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான் சடலம் தற்பொழுது வவுனியா பொதுவைத்திய சாலையில்...

முச்சரக்கர வண்டி இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

இலங்கையில் முச்சக்கர வண்டிகள் தேவைக்கதிகமாக உள்ளதால் அவற்றை இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முச்சக்கரவண்டிகளில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது...

பூர்வீக இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படவேண்டும்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் மீள்குடியேற்றக் குழுவின்...

சங்குப்பிட்டி விபத்தில் பொலிஸ் உட்பட இருவர் பலி!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்துக்குச் சமீபமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபில்ராஜ்(வயது 26) என்ற குடும்பஸ்தரும் மாவத்தகமைவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பொலிஸாரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கதிரவேலு...

யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா...

தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சித்தீர்வை ஏற்க வைப்பதற்கும், பொறுப்புக் கூறலின்றி அரசு தப்பித்துக் கொள்வதற்கும் சம்பந்தன், சுமந்திரன் துணைபுரிகின்றனர்!!

எதிர்காலத்தில் தமிழரின் அரசியல் தீர்வு மற்றும் இனஅழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களுக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியது. கடந்த 20-7-2016 அன்று கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக மாநாட்டிலேயே...

யாழ் பல்கலைக்கழகம் மண்ணின் தனித்துவத்தை பேணிப்பாதுகாக்க வேண்டும்: கஜேந்திரகுமார்

கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் ஊடக மாநாடு கட்சியின் யாழ்-கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய மேற்படி...

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்பம்

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை (22.07.2016) ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார். வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுடன் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு...

தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன. தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த...

இறுதிக் கட்ட யுத்தத்தில் ஐநா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை!

சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஐநா நடந்துகொண்ட விதம் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என ஜ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான முன்னணி வேட்பாளர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார். வன்முறை, தீவிரவாதம் மற்றும் சர்வதேச பாதுகாப்பின்மை போன்ற அடிப்படைக் காரணங்களுக்கெதிராகப் போராடுவது போன்ற சிறப்பான பணிகளை ஐநா மேற்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். ஐநாவின் நிகழ்ச்சித்திட்டத்தின்...

இந்திய மீனவர்களைச் சுடுவதே இலகுவான வழி!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சுடுவதற்கு கடற்படையினருக்கு அனுமதி கொடுப்பதே ஒரே வழியென மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ஆனால் அதற்கான அனுமதியை வழங்கும் சட்டமூலத்தை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்தாது என்ற நிலையிலேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் கைமீறிப் போகின்றதெனத் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வடமாகாண மீனவர் சங்கத் தலைவர்களுடன்...

யாழ் பல்கலை மோதலை கட்டுப்படுத்தியமை அதிர்ஷ்டவசமானது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், பெரும்பான்மையின மாணவர்களுக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலை 'துரதிர்ஷ்டவசமான சம்பவம்' என வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், இச்சம்பவம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தும் போது, ஏனைய பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். புதுமுக மாணவர்களை...

வடமாகாணத்தில் மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவில் புறக்கணிப்பு

கடந்த காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, அம்மாகாணங்களில் மாற்று வலுவுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அதில் வட மாகாணத்தைச் சேர்ந்தோருக்கான கொடுப்பனவில் புறக்கணிப்புக் காணப்படுவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரம் நிறைவடைந்ததும், நிலையியற் கட்டளை 23/3இன்...
Loading posts...

All posts loaded

No more posts