காணிகளை விடுவிக்குமாறு கோரி வவுனியாவில் இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆயுதப் போர் நிறைவடைந்து 07வருடங்கள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் இன்னமும் நிலை கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்....

சொந்த நிலங்களை மீட்கும் பணியிலிருந்து ஓயமாட்டேன்!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். எனினும் நாம் வழங்கிய கால எல்லைக்குள் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாமை கவலையளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனது செயளாலர் ஊடாகவே இந்தச் செய்தியை கேப்பாப்புலவு மக்களுக்கு கூறியுள்ளார். நேற்று மாலை...
Ad Widget

சிறை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களா?? நீதிபதி இளஞ்செழியன்

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட...

வட மாகாண மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிருப்தி

வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை நிராகரித்து மத்திய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 57 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண சபை முதலமைச்சர் இவ்வாறு...

பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை சிங்கள மாணவர்களை அனுப்பமாட்டோம்!

தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லையென சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பெற்றோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தமக்குத் திருப்பதியளிக்கவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள...

விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கும் பரிந்துரைகளுக்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவம் நேற்றைய தினம் (வியாழக்கிமை) நாடாளு மன்றத்தில் விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்...

ஓகஸ்ட் 15 இற்குள் முகாமில் வசிப்போரை குடியமர்த்த திட்டம்!

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி 31 முகாம்களில் வசிக்கும் 971பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் காணி இல்லாதோருக்கு வழங்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில்...

பாடசாலைக்கு அருகில் மிதிவெடி

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் மிதிவெடியொன்று நேற்று வியாழக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நிலத்தில் ஓரளவு புதையுண்ட நிலையில் காணப்பட்ட இந்த மிதிவெடியை, அவ்வழியே சென்றவர்கள் அவதானித்து பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டனர். விசேட...

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமா? உடன் அறிவியுங்கள்

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 077 32 20 032 என்ற கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ...

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன், யுவதி கைது

யாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 20 வயதான இளைஞன் மற்றும் யுவதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவரும் வவுனியா, சிதம்பரப்புரம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்....

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சிங்கள மாணவர்களுக்கெதிராக முறைப்பாடு!

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.ரிசிதரன் சிங்கள மாணவர்கள் நான்குபேருக்கு எதிராக கோப்பாய்ப் பிரதேச காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், மாணவர் ஒன்றியத் தலைவர் ரிசிதரனை நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து ரி.ரிசிதரனை 2,00,000 ரூபா பிணையில் செல்வதற்கு சின்னத்துரை...

சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வடக்கில் விசேட செயற்றிட்டம்

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுப்பண்டங்கள் மற்றும், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முகமாக விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 'உலக நாடுகளில் இன்று தொற்றுநோய்களின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாகும். அண்மைக்காலமாக வடக்கு...

யாழ்ப்பாணத்தில் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டனர்

யாழ்ப்பாணத்தில் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண சிறைச்சாலையில் சில கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 பேர், கடந்த 19ம் திகதி முதல் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். தங்களுக்கு கூடிய விரைவில் பிணை வழங்குமாறு...

யாழ் பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறிய போதிலும் உண்மையில் இயல்பு நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்....

சிங்கள மாணவர்களே மாணவர் ஒன்றியத் தலைவரைத் தாக்கினர்!! கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவத்தில் சிங்கள மாணவர்களே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை தாக்கியதாகத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்கலைக்கழகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரம் அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த பாடுபட்டுவரும் அவர் மீது திட்டமிட்டு இராணுவப்புலனாய்வின் பின்னணியில் கைது...

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக சூழ்ச்சி?

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறாயினும் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக தாம் இருப்பதாகவும்...

ஒரு கூர்வாளின் நிழலில் எனக்கு தெரிந்த தமிழினியைக் காணவில்லை-வெற்றிச்செல்வி

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையால் தமிழ்மக்கள் அனைத்தையும் இழக்கும் அபாயம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புகூறல் ஆகியன இரண்டும் சமாந்திரமாக...

ரவிராஜ் படுகொலை: 7பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விசாரணை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக 7 சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீப் சந்திம தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு அடுத்த வாரம் முதல் தடை

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts