- Thursday
- August 13th, 2026
யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை சாதாரண குற்றவியல் சம்பவம் எனக் கருதாது, மாணவர்கள் இவ்வாறு நடந்துகொண்டமைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியவேண்டுமெனத் தெரிவித்துள்ளதோடு, அதனை நிவர்த்திசெய்வதற்கான வழிமுறைகளையும் கண்டறியவேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும்,...
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் நேற்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர். போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும்...
வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்....
யாழ் சிறைச்சாலைகளிலுள்ள சில கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களே தம்மை விரைவில் பிணையில் விடுவிக்குமாறு கோரி, நேற்று முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார். வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில்...
முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள் பிரித்து நோக்கவில்லை. ஆரம்பகாலத்தில், எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன' என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம்களுடனான உறவுகள் தொடர்பில் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்...
யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவனின்...
யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நேற்றிரவு வரை எவரும் கைதுசெய்யப்பட்டாத அதேநேரம் எந்நேரமும் மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், தமிழ் சிங்கள மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆட்சியிலிருந்து மக்களால் விரட்டப்பட்டவர்கள் தூண்டியிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார். கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தையடுத்து இன்று (புதன்கிழமை) பல்கலைக்கழகம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே உருவாகிய மோதல் சம்பவத்தையடுத்து, மீண்டும் மோதல் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷன...
தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக...
'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் யாழ். பல்கலைக்ககழகத்தின் அனைத்துப் பீடங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் இயங்கவில்லை. இந்நிலையில் விஞ்ஞானபீடம், கலை, வணிக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும்...
"தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.சுமார் 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசின் உதவியில்கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...
மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில்...
Loading posts...
All posts loaded
No more posts
