சிலர் தீர்வு பற்றி கலந்துரையாடாது குழப்ப வழி தேடுகின்றனர்!

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்த சூழலை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள இனவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டம் மற்றும் அமைதிக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நாட்டுக்குள் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

Related Posts