சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு; முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என். எம். அமீன்

ஊடகத்துடன் புதிதாக இணைந்திருக்கின்ற சமூக ஊடகங்கள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும். சமூக ஊடகங்கள் இன்று சமூகத்தின் மத்தியிலே பெரும் செல்வாக்கை ப் பெற்றிருக்கின்றன. இதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது என்பது பற்றி குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் விழிப்பாக இருப்பது அவசியமாகும் என்று முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என். எம். அமீன் கூறியுள்ளார்....

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , தேர் இழுக்க தொடங்கியதும் தமது மேலாடைகளை கலைந்து விட்டு , தமது காலணிகளை கழட்டி விட்டு தாமும் பக்கதர்களுடன் இணைந்து தேரினை இழுத்தனர்.
Ad Widget

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் எச்சரிக்கை!!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப்போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் இடம்பெறக்கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் பேராசிரியர் மெகான் டி சில்வா. இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கலைப்பீட மாணவர்கள்தான் மோதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள்...

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு : சி.வி. சம்மந்தனின் நிலைப்பாட்டை அவதானிக்கின்றோம்

யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது . சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் . ஆனால் தமிழ் தலைமைகளும் பல்கலைக்கழகமும் இன்னும் மாறாதது போன்றே தோன்றுகின்றது . சி.வி விக்கினேஸ்வரன் மற்றும்...

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் திணைக்களத்தினால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த 2500ரூபா வேதன...

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது!

உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போதுகூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைதிப்பூங்காவாக செயற்பட்டது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த, நல்லாட்சி அரசாங்கம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமாகும். இதனை திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாக ஏற்பட்ட குழப்பம் என்றே...

யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில்...

தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும்’

'புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது, நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல. எல்லோரையும் ஒன்றாக, ஒரே குடையின் கீழ் வைத்து, சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்'  என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகங்கள் தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர...

யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது, யாழ் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு மேலும் கூறியதாவது,...

யாழில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ் சிறைச்சாலைகளிலுள்ள சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களே தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெரனிய குறிப்பிட்டுளளார். இன்று காலை ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 36 கைதிகள் இணைந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர்களில் 18 பேர்...

பசில் ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ உடல் நல பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் பரிந்துரைப்படி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்‌ஷவிற்கு வைத்தியப் பரிசோதனை ஒன்று மேற்கொள்வதற்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கூறினார்.

ஆகஸ்ட் முதல் இபோச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

ஆகஸ்ட் ஆரம்பம் முதல் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தற்போது ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி...

யாழ் பல்கலைக்கழக மோதல் குறித்து விஷேட கலந்துரையாடல்

கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம் ஆகியோர் உட்பட மாணவர்களும் குறித்த...

யாழ்.பல்கலைக்கழக மோதலுக்குக் காரணமானவர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். “இந்தச் சம்பவம் தொடர்பான சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மோதலில் தொடர்புடைய மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான, ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ்....

இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு

யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின்...

யாழ் பல்கலையில் நடந்தது என்ன? மாணவர் ஒன்றியம் அறிக்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு கடந்த 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்தநிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்...

பஷில் ராஜபக்ஷ கைது

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பிலேயே, பஷில் கைதுசெய்யப்பட்டுள்ளார். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, இரண்டு...

நாமல் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று கொழும்பு கோட்டே நீதிமன்றில் நாமலை முன்னிலைப்படுத்தியபோதே பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமல் ராஜபக்ஸவுக்கு, 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்க ஜயரத்ன இன்று தெரிவித்தார். மேலும்,...

சுவிஸ்குமாரின் தாயார் சிறையில் மரணம்!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு...
Loading posts...

All posts loaded

No more posts