சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானம்

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 400 மில்லியன் ரூபா செலவில் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளில் மைதானம்...

இரா.சம்பந்தனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக வவுனியாவில் அவரது உருவபொம்மை வைக்கப்பட்டு அவ் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன. நேற்றுமுன்தினம் வவுனியாவிற்கு வருகைதந்திருந்த அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற – மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சந்தித்திருந்ததாகவும்...
Ad Widget

மோதலில் காயமடைந்த மாணவர்களை ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே பார்வையிட்டார்

யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர் குழுக்களுக்கிடையேயான மோதலில் காயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை நேற்று (17) சென்று பார்வையிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே காயமடைந்த மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவுப் பெருக்குமரம் பசுமைச் சுற்றுலாச் சின்னமாகப் பராமரிப்பு

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும் 40 வரையான மரங்களில் நெடுந்தீவில் உள்ள பெருக்குமரமும்...

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் இனவாத மோதல் அல்ல: உயர்கல்வி அமைச்சர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலானது இனவாத மோதல் அல்லவென உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான மோதல்கள் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுவதாகவும், அனைத்து மக்கள் மத்தியிலும் தீவிரவாதிகள் சிலர் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மோதலை அடுத்து சகல பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல்கலைக்கழகத்தை...

தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு!!– சம்பந்தன்

தமிழர்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன் இந்நடவடிக்கையைக் குழப்ப முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ முயன்று வருவதால் தமிழ்மக்களை நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது ஆகிய...

யாழ். நீதிமன்றத்தில் உந்துருளி களவு!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து 9 இலட்சம் பெறுமதியான உந்துருளியொன்று திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, கடந்த புதன்கிழமை நபரொருவர் நீதிமன்றத்துக்கு உந்துருளியில் சென்று அதனை நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, திரும்பி வரும்போது அவரது உந்துருளி காணாமல் போயுள்ளது. இதனையடுத்து குறித்த நபரால் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணையை...

கதிர்காமத்துக்குச் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம், கதிர்காமம் ஏழுமலைக்குச் செல்லும் வாகனத்திற்கு முந்திச்செல்ல இடம்கொடுக்கவில்லையென இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது,...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல், கூட்டமைப்பு அதிர்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை தொடர்பாகவும் தாம் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்துக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே...

2 மாதங்களில் மருந்துகளின் விலை குறையும்!

மருந்துகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து தொடர்பான புதிய சட்டத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடைமுறையின் அளவு குறைக்கப்படும் எனவும் சில நிறுவனங்களின் ஏகபோக உரிமை காரணமாக அவை மீறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மருந்துகளின்...

மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத்...

யாழ் பல்கலைக்கழகத்தில் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து கவலையடைவதாக அப் பல்கலைக்கழகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்ற கையெழுத்துடன் குறித்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்...

யாழ் பல்கலை மோதலை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டாதீர்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் என, மாணவர் சங்கம் அனைவரிடமும் கோரியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பில் இரு குழுக்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினையை முன்னிறுத்தி சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக...

யாழ் பல்கலைக்கழக மோதல் ; விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரைணை மேற்கொள்ள தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றை மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும்...

70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...

இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்தார் சம்பந்தன்

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்னும் கருத்தாய்வு இன்று மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்பதற்காக...

காணாமல் போனார் காரியாலயம் : கருத்தறியும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு இன்று காலை 9.30 முதல் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக, காணாமல்போனவர்களின்...

பிராந்திய விமான நிலையமாக பலாலியை மாற்றுவதில் இந்தியா தீவிர

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்துவது தொடர்பில் களஆய்வை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான களஆய்வுகளை இந்திய விமான நிலைய அதிகார சபை மேற்கொண்டு வருவதாக இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எம்.சி.நிமல்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். விமான...

சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கணவனால் தீவைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயராஜா தர்சினி (வயது 24) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் வசிக்கும் இவ்விருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனினும் அண்மை...

நோயாளியின் மோதிரம் வைத்தியசாலை சிற்றூழியரால் அபகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணின் 1 பவுண் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியரால் சனிக்கிழமை (16) மாலை அபகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த முதிய பெண்மணி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு...
Loading posts...

All posts loaded

No more posts