- Wednesday
- August 12th, 2026
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது. அணைத்து மாணவர்களுக்கும் சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என, அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார். அப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வவுனியா கிளையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...
யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு...
சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடல்பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நேற்று இரவு குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்...
இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் எயிட்ஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரதன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்...
மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது. அதில்...
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு இராணுவ...
மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெத்தை வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெத்தை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெத்தை, அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த சார்பு அணி, மைத்திரி சார்பு அணி என இரண்டு அணிகள் காணப்படுவதால் சு.கவின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை...
யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அச்சுவேலி முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபரை அவசரமாகப் பிணையில் விடக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த 2014 மே 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த நித்தியானந்தன் அருள்நாயகி, நித்தியானந்தன் சுபாங்கன், யசோதரன் மதுஷா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தச்...
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை...
யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் கல்வித் திணைக்களத்திற்கும் கல்வி உயர் அதிகாரிகளுக்கும் எதிரான அதிகளவிலான முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்திலிருந்து வருவதாக...
பிரான்ஸில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை குறித்த தாக்குதலில் இலங்கையர்கள் எவராவது உயிரிழந்து அல்லது காயமடைந்து இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. சம்பவம்...
பெறுமதி சேர்க்கப்பட்ட 'வற்' வரி அதிகரிப்புக்கு எதிராக, உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவைப் பொருட்படுத்தாது, மக்கள் மீது வரிச் சுமையைச் சுமத்துவதற்கு அரசாங்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர், வற் வரி...
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக் கொள்ள முன்னர் இலங்கைக்கு வந்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தம்பதியினர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இஸ்மிய கற்கை நெறிகளுக்கான முக்கிய இடமாக மாறிவருவதாகவும் அதன் காரணமாக இவர்களை போன்றவர்களால் அதிக...
'மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்' என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று வெள்ளிக்கிழமை (15), யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார். 'மஹிந்த அரசைப் போன்று மைத்திரி...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது...
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
