Ad Widget

அச்சுவேலி முக்கொலை வழக்கு: சந்தேகநபரின் பிணை மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!

யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அச்சுவேலி முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபரை அவசரமாகப் பிணையில் விடக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த 2014 மே 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த நித்தியானந்தன் அருள்நாயகி, நித்தியானந்தன் சுபாங்கன், யசோதரன் மதுஷா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவர் கைதாகி கடந்த இரு ஆண்டுகளாக விளக்கமறியலில் இருக்கிறார்.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இரு வருடங்களாக விளக்கமறியலில் இருக்கும் சந்தேகநபரான தனஞ்செயனுக்கு அவசரமாக பிணை வழங்க வேண்டும் எனக் கோரி யாழ். மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மா.இளஞ்செழியன் இரு வருடங்களாக விளக்க மறியலில் இருக்கிறார் என்பதற்காக சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது.

அவருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பதை ஆராய்ந்தே முடிவு செய்ய முடியும் எனவே இந்த வழக்கை ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Related Posts