தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக வவுனியாவில் அவரது உருவபொம்மை வைக்கப்பட்டு அவ் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்றுமுன்தினம் வவுனியாவிற்கு வருகைதந்திருந்த அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற – மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சந்தித்திருந்ததாகவும் அவரது வருகையை அறிந்த சிலரே ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மையை காட்சிப்படுத்தி இவ் விஷமத்தனமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமைத்துவ தகுதி உண்டா? என்று கேள்வியெழுப்பி பதாகையும் உருவபொம்காமையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.