Ad Widget

பல்கலைக்கழக சம்பவம் மஹிந்த அணியினரின் தூண்டுதலில் நடந்திருக்கலாம்! சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆட்சியிலிருந்து மக்களால் விரட்டப்பட்டவர்கள் தூண்டியிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான மாற்றங்களை தடுக்க முயற்சிக்கும் தரப்பினர் இருக்கலாம்.

குறிப்பாக நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை தடுப்பதற்காகேவே இவ்வாறான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இவற்றுக்கு தமிழ் மக்களும், மாணவர்களும் இடமளிக்க கூடாது. யாழ். பல்கலைக்கழக சமூகம், அனைத்து சமூகங்களினதும் பாரம்பரிய கலாச்சாரங்களையும் முன்னெடுக்கின்ற ஒரு முன்மாதிரி கொள்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts